பிரதமர் அலுவலகம்

75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து உரை

Posted On: 16 OCT 2022 3:26PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, 75 மாவட்டங்களில் உள்ள 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்றினார்.

தனது உரையில் பிரதமர்:   75 டிஜிட்டல் வங்கி அலகுகள் மக்களின் வங்கி அனுபவத்தை மேம்படுத்தும். சாதாரண குடிமக்களுக்கு எளிதாக வாழ்வதற்கான திசையில் இது ஒரு பெரிய படியாகும். அத்தகைய வங்கி அமைப்பில், குறைந்தபட்ச உள்கட்டமைப்புடன் கூடிய அதிகபட்ச சேவைகளை வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் எந்த ஆவணத்தையும் உள்ளடக்காமல் டிஜிட்டல் முறையில் நடக்கும். இது வங்கி நடைமுறையை எளிதாக்கும் அதே வேளையில், வலுவான மற்றும் பாதுகாப்பான வங்கி முறையை வழங்கும்.

நண்பர்களே!

 சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்கள் கடன்களைப் பெறுவதற்கு பணத்தை மாற்றுவது போன்ற பலன்களைப் பெறுவார்கள். டிஜிட்டல் வங்கி அலகுகள் அந்த திசையில் மற்றொரு பெரிய படியாகும், இது இந்தியாவின் சாமானியரின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் நாட்டில் மேற்கொள்ளப்படுகிறது.

 

 இந்தியாவின் டிஜிட்டல் வங்கி உள்கட்டமைப்பை பன்னாட்டு நிதியம் பாராட்டியுள்ளது. புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து, அதைத் தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றிய இந்தியாவின் ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இதற்கான பெருமை சேரும்.

சகோதர, சகோதரிகளே!

ஊழலை ஒழிப்பதில் நேரடி பணப்பரிவர்த்தனையின் பங்கு பாராட்டக் கூடியது. நேரடி பணப் பரிமாற்றம் மூலம் பல்வேறு திட்டங்களில் 25 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த தவணையை நாளை விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

 இந்தியாவின் கொள்கைகள் மற்றும் முயற்சிகளின் மையத்தில் ஃபின்டெக் இருக்கிறது, எதிர்காலத்தை வடிவமைப்பதில் து முக்கிய பங்கு வகிக்கிறது. டிஜிட்டல் வங்கி அலகுகள் ஃபின்டெக்கின் இந்த திறனை மேலும் விரிவுபடுத்தும். "ஜன்தன் கணக்குகள் நாட்டில் நிதிச் சேர்க்கைக்கு அடித்தளமிட்டிருக்க, பின்டெக் நிதிப் புரட்சியின் அடிப்படையை உருவாக்கும்.

நண்பர்களே!

 பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும். வங்கியானது இன்று நிதி பரிவர்த்தனைகள் மட்டுமல்லாமல், ‘நல்லாட்சி’ மற்றும் ‘சிறந்த சேவை வழங்கல்’ ஆகியவற்றின் ஊடகமாகவும் மாறியுள்ளது. “இன்று நமது சிறு தொழில்கள், நமது எம்எஸ்எம்இக்களும், ஜெம் அமைப்பு மூலம் அரசாங்க டெண்டர்களில் பங்கேற்கின்றன. இதுவரை ரூ.2.5 லட்சம் கோடி மதிப்பிலான ஆர்டர்கள் ஜெம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் வங்கி அலகுகள் மூலம் இந்த திசையில் இன்னும் பல புதிய வாய்ப்புகள் உருவாகும்.

 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வங்கிகளின் செயல்பாடுகளை முடிவு செய்ய தொலைபேசி அழைப்புகள் வந்தது. மேலும், தொலைபேசி வங்கி அரசியல், வங்கிகளை பாதுகாப்பற்றதாக மாற்றி, ஆயிரக்கணக்கான கோடி ஊழல்களை விதைத்து நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளது.

டிஜிட்டல் வங்கி அலகுகள் மற்றும் பின்டெக்கின் புதுமையான பயன்பாடு போன்ற புதிய முன்முயற்சிகள் மூலம் வங்கி அமைப்புக்கு ஒரு புதிய சுய-உந்துதல் பொறிமுறையானது இப்போது உருவாக்கப்படுகிறது. நுகர்வோருக்கு எவ்வளவு சுயாட்சி உள்ளதோ, அதே வசதி மற்றும் வெளிப்படைத்தன்மை வங்கிகளுக்கும் உள்ளது.

 மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வங்கித் தலைவர்கள், நிபுணர்கள் மற்றும் பயனாளிகள் காணொலி மூலம் இணைக்கப்பட்டனர்.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

**************

(Release ID:1868257)

GS/AG/Sri/RR



(Release ID: 1868728) Visitor Counter : 151