பிரதமர் அலுவலகம்
13-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமரின் தொடக்க கருத்துக்கள்
Posted On:
09 SEP 2021 1:32PM by PIB Chennai
மேதகு
அதிபர் புதின்,
அதிபர் ஜி,
அதிபர் ரமாபோஸா,
அதிபர் பொல்சனாரோ அவர்களே வணக்கம்.
இந்த பிரிக்ஸ் மாநாட்டுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். பிரிக்ஸ் அமைப்பின் 15-வது ஆண்டில் இந்த மாநாட்டுக்கு தலைமைவகிப்பதற்காக நானும், இந்தியாவும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். உங்களுடனான இந்த மாநாட்டுக்கு விரிவான திட்டத்தை வைத்துள்ளோம். நீங்கள் அனைவரும் ஒப்புக் கொண்டால், இந்தத் திட்டத்தை நிறைவேற்றிவிடலாம். நன்றி, தற்போது திட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
தலைவர்களே!
இந்தியாவின் தலைமைக்காலத்தில் அனைத்து பிரிக்ஸ் கூட்டு நாடுகளும், ஒவ்வொருவரும் முழுஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். இதற்காக உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 15 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை பிரிக்ஸ் அமைப்பு படைத்துள்ளது. உலகின் வளரும் பொருளாதாரத்தின் சக்திவாய்ந்த குரலாக இன்று நாம் திகழ்கிறோம். வளரும் நாடுகளின் முன்னுரிமைகள் மீது கவனம் செலுத்துவதற்கும் இந்தத் தளம் பயன்படுகிறது.
புதிய வளர்ச்சி வங்கி, இடரை எதிர்கொள்வதற்கான தயார்நிலை அமைப்பு, எரிசக்தி ஆராய்ச்சி ஒத்துழைப்பு அமைப்பு போன்ற வலுவான அமைப்புகளையும் பிரிக்ஸ் ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் மிகுந்த வலுவான அமைப்புகளாக திகழ்கின்றன. இதற்காக நாம் அதிகஅளவில் பெருமைகொள்ளலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும், நாம் மிகுந்த அளவுக்கு சுயதிருப்தி அடைந்துவிடக் கூடாது. அடுத்த 15 ஆண்டுகளில் மேலும் பலன் அளிக்கும் வகையில் பிரிக்ஸ் அமைப்பு இருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
**************
(Release ID:1867673)
(Release ID: 1868703)
Visitor Counter : 91