பிரதமர் அலுவலகம்

பிரேசிலியா-வில் நடைபெற்ற 11-வது பிரிக்ஸ் மாநாட்டின் முழுஅமர்வில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை

प्रविष्टि तिथि: 15 NOV 2019 2:03PM by PIB Chennai

அதிபர் பொல்சனாரோ அவர்களே,

அதிபர் புதின் அவர்களே,

அதிபர் ஜி அவர்களே,

அதிபர் ரமாபோஸா அவர்களே,

 

நட்பு நாடான பிரேசிலின் இந்த அழகான தலைநகரில் 11-வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சிறப்பான வரவேற்பு அளித்ததற்காகவும், மாநாட்டுக்கு அற்புதமான ஏற்பாடுகளை செய்ததற்காகவும் எனது நண்பர் அதிபர் பொல்சனாரோ-வுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 

தலைவர்களே,
 

இந்த மாநாட்டின் கருத்துருவாக, “புத்தாக்க எதிர்காலத்துக்கு பொருளாதார வளர்ச்சி” என்ற தலைப்பு அமைந்திருப்பது மிகவும் பொருத்தமானது. புத்தாக்கம் என்பது நமது வளர்ச்சியின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது. எனவே, புத்தாக்கத்துக்காக பிரிக்ஸ் அமைப்பின்கீழ், ஒத்துழைப்பை நாம் வலுப்படுத்த வேண்டியது அவசியம். புத்தாக்கம் மற்றும் நடைமுறை ஒத்துழைப்புக்காக பல்வேறு வெற்றிகரமான நடவடிக்கைகளை பிரேசிலே மேற்கொண்டுள்ளது. வரும் ஆண்டுகளில் பிரேசில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

தலைவர்களே,
 

நிதி நெருக்கடி மற்றும் பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் நிலவிவந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, பிரிக்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. 2009-ம் ஆண்டு எகடெரின்பர்க்-கில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளைக் கடந்துள்ளது. பல்வேறு ஆண்டுகளில் சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு பிரதான ஊக்குவிப்பாக பிரிக்ஸ் நாடுகள் திகழ்கின்றன. ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் நாம் பங்களிப்பை செய்துள்ளோம். அதேநேரத்தில், அமைதியான, வளமான மற்றும் பல்துருவ உலகுக்கு மிகப்பெரும் காரணியாக நாம் உருவெடுத்துள்ளோம்.

தலைவர்களே,

சர்வதேச பொருளாதாரத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பிரிக்ஸ் வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகளை மிகவும் சக்திவாய்ந்ததாகவும், பலன்கிடைக்கும் வகையிலும் நாம் மாற்ற வேண்டியது அவசியம். பரஸ்பர முதலீடு மற்றும் வர்த்தகத்தில் சிறப்பு கவனத்தை நாம் செலுத்த வேண்டும்.


**************

(Release ID:1867689)


(रिलीज़ आईडी: 1868693) आगंतुक पटल : 106
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam