பிரதமர் அலுவலகம்
இந்தியாவுக்கு நார்வே பிரதமர் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை
Posted On:
09 JAN 2019 2:18PM by PIB Chennai
பிரதமர் எர்ணா சோல்பெர்க் அவர்களே,
நார்வே-யிலிருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட மதிப்புமிகுந்த விருந்தினர்களே,
வணக்கம்,
நண்பர்களே,
கடந்த ஆண்டில் ஸ்டாக்ஹோமில் பிரதமர் சோல்பெர்க்-கை சந்தித்தபோது, இந்தியாவுக்கு வருமாறு நான் அழைப்பு விடுத்தேன். இந்தியாவில் அவரை வரவேற்கும் வாய்ப்பை நான் இன்று பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நார்வே பிரதமரின் முதலாவது இந்தியப் பயணமாக இது அமைந்துள்ளது. மேலும், ரெய்சினா விவாதத்தின் தொடக்க அமர்வில் அவர் உரையாற்ற உள்ளது சிறப்புவாய்ந்தது. இதற்காக அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் என்பது, இந்தியாவின் வளர்ச்சி இலக்குகளுடன் முற்றிலுமாக இணைந்துள்ளது. நார்வே-இந்தியா ஒத்துழைப்பு முயற்சிகள் மூலம், தாய்-சேய் விவகாரத்தில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய அம்சமாக திகழ்கிறது.
நண்பர்களே,
இந்தியா-நார்வே இடையேயான நல்லுறவில் வர்த்தகம் மற்றும் முதலீடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் 1,200 கோடி டாலர் அளவுக்கு நார்வே-யின் அரசு ஓய்வூதிய நிதியமான குளோபல் முதலீடு செய்துள்ளது. பிரதமருடன் நார்வே-யிலிருந்து 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நேற்று நடைபெற்ற இந்தியா-நார்வே வர்த்தக மாநாட்டில் இந்தியாவைச் சேர்ந்த தொழில் துறையினருடன் அவர்கள் பயனுள்ள கலந்துரையாடலை நடத்தியுள்ளனர். இந்தியாவில் அதிக அளவில் உள்ள பங்குகளில் முதலீடு மற்றும் அந்நிய நேரடி முதலீட்டு வாய்ப்புகள் மூலம், வரும் ஆண்டுகளில் நார்வே-யின் நிறுவனங்கள் பயனடையும் என்று நான் நம்புகிறேன். குறிப்பாக, சாகர்மாலா திட்டத்தின்கீழ், கப்பல் கட்டுமானம், துறைமுக அடிப்படையிலான வளர்ச்சி ஆகியவற்றில் நார்வே நிறுவனங்களுக்கு அதிகஅளவில் வாய்ப்புகள் கிடைக்க உள்ளன.
நன்றி.
**************
(Release ID: 1867704)
(Release ID: 1868682)
Visitor Counter : 88