பிரதமர் அலுவலகம்
இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்போது பிரதமர் வெளியிட்ட அறிக்கை
Posted On:
25 FEB 2020 1:47PM by PIB Chennai
எனது நண்பரும், அமெரிக்க அதிபருமான டொனால்டு டிரம்ப் அவர்களே, மதிப்புக்குரிய அமெரிக்க குழுவின் உறுப்பினர்களே, ஆடவர்களே, மகளிரே, அனைவருக்கும் வணக்கம்.
அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குழுவினருக்கு இந்தியாவில் மீண்டும் ஒருமுறை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின்போது அவர், தனது குடும்பத்தினரையும் அழைத்துவந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 8 மாதங்களில் அதிபர் டிரம்ப்-புக்கும், எனக்கும் இடையே 5-வது முறையாக சந்திப்பு நடைபெற்றுள்ளது. மொட்டேரா-வில் அதிபர் டிரம்ப்-புக்கு நேற்று அளிக்கப்பட்ட இதுவரை இல்லாத வகையிலான மற்றும் வரலாற்றுப்பூர்வமான வரவேற்பு, என்றென்றும் நினைவில் இருக்கும். இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவு, இரு நாடுகளுக்கும் இடையேயானது மட்டுமல்லாமல், மக்களால் நடத்தப்படும் மற்றும் மக்களை மையமாகக் கொண்டது என்பது நேற்று மீண்டும் தெளிவாகியுள்ளது. இந்த நல்லுறவு, 21-ம் நூற்றாண்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. எனவே, நமது நல்லுறவை விரிவான சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு அளவுக்கு கொண்டுசெல்ல நானும், அதிபர் டிரம்ப்-பும் முடிவுசெய்துள்ளோம். நல்லுறவை இந்த அளவுக்கு கொண்டுவருவதற்கு அதிபர் டிரம்ப் அளவிட முடியாத அளவுக்கு பங்களிப்பை செய்துள்ளார்.
நண்பர்களே,
இன்றைய நமது விவாதத்தின்போது, பாதுகாப்பு மற்றும் ராணுவம், எரிசக்தி பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சர்வதேச இணைப்பு, வர்த்தக உறவுகள் அல்லது மக்களுக்கு இடையேயான நல்லுறவுகள் என ஒவ்வொரு அம்சத்திலும் இந்த ஒத்துழைப்பை நேர்மறையானதாக நாங்கள் கருதுகிறோம். நமது பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு அதிகரிப்பது என்பது மிகவும் முக்கிய அங்கமாக அமைந்துள்ளது.
உங்களுக்கு நன்றி.
**************
(Release ID:1867681)
(Release ID: 1868429)
Visitor Counter : 108