பிரதமர் அலுவலகம்
2022 தேசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்ததையடுத்து, வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
13 OCT 2022 8:54PM by PIB Chennai
2022 தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து தடகள வீரர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, பதக்கங்களை வென்ற வீரர்களைப் பாராட்டியுள்ளார். 2022 தேசிய விளையாட்டுப் போட்டிகளின் பிரம்மாண்டமான வெற்றியைக் குறிப்பிட்டு, விளையாட்டு உள்கட்டமைப்பு, வீரர்களால் பரவலாகப் பாராட்டப்பட்டதாகவும், மறுசுழற்சி, நெகிழி கழிவுகளைக் குறைத்தல் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுதல் உள்ளிட்டவை அடங்கிய நிலைத்தன்மையில் கவனம் செலுத்தியதற்காகவும் இந்த விளையாட்டுப் போட்டிகள் என்றும் நினைவில் கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். குஜராத் மாநில மக்கள் மற்றும் அரசின் விருந்தோம்பலை அவர் பாராட்டினார்.
தொடர் ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் தெரிவித்துள்ளதாவது:
“2022 தேசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று நிறைவடைந்தன. இதில் கலந்துகொண்டு விளையாட்டு உணர்வை மேம்படுத்திய ஒவ்வொரு வீரருக்கும் வணக்கம். போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள். அவர்களது சாதனையால் பெருமிதம் கொள்கிறேன். வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு என் நல்வாழ்த்துகள்.”
“இந்த ஆண்டின் தேசிய விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு காரணங்களால் சிறப்பம்சம் பெறுகிறது. விளையாட்டு உள்கட்டமைப்பை வீரர்கள் பரவலாகப் பாராட்டினார்கள். பாரம்பரிய விளையாட்டுகளில் அதிகரித்த வீரர்களின் பங்கேற்பும் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம்.”
“மறுசுழற்சி, நெகிழி கழிவுகளைக் குறைத்தல் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுதல் உள்ளிட்டவை அடங்கிய நிலைத்தன்மையில் கவனம் செலுத்தியதற்காகவும் 2022 தேசிய விளையாட்டுப் போட்டிகள் என்றும் நினைவுகூரப்படும். விளையாட்டுகளின் வாயிலான குஜராத் மாநில மக்கள் மற்றும் அரசின் விருந்தோம்பலையும் நான் பாராட்ட விரும்புகிறேன்.”
**************
BG/PKV/IDS
(रिलीज़ आईडी: 1867640)
आगंतुक पटल : 267
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam