தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘மடாடேட்டா ஜங்ஷன்’ என்னும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் 2-வது அத்தியாயம் இன்றிரவு 7.25 மணி முதல் 7.40 வரை அகில இந்திய வானொலியின் எப்எம் கோல்டு அலைவரிசையில் ஒலிபரப்பாகும்

Posted On: 14 OCT 2022 10:05AM by PIB Chennai

அகில இந்திய வானொலி, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு குறித்த மடாடேட்டா ஜங்ஷன்’ என்னும்  புதிய வாராந்திர நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளது. நிகழ்ச்சியின் இரண்டாவது  அத்தியாயம் இன்றிரவு, 100.1 எப்எம் கோல்டு சேனலில் 7.25 முதல் 7.40 மணி வரை தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் தராபாத் நிலையங்களில்  ஒலிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சியின் கருப்பொருள், ஒரு வாக்கின் வலிமை என்பதாகும்.

  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 23 மொழிகளில் 15 நிமிட வாராந்திர நிகழ்ச்சி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒலிபரப்பாகிறது.

இது நாடு முழுவதும் உள்ள எம்எம் ரெயின்போ, விவித் பாரதி நிலையங்கள் மற்றும் அகில இந்திய வானொலியின் முதன்மை சேனல்களில் ஒலிபரப்பப்படும். மக்கள் ட்விட்டரில் @airnewsalerts,  நியூஸ் ஆன் ஏர் செயலி மற்றும் அகில இந்திய வானொலியின் யூடியூப் சேனல்களிலும் நிகழ்ச்சியைக் கேட்கலாம்.

வாராந்திர  நிகழ்ச்சி வாக்காளர் சூழல் அமைப்பின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. ஒவ்வொரு அத்தியாயமும் தேர்தல் செயல்முறையின் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. அனைத்து 52 வார கருப்பொருள்களும் அனைத்து தகுதியுள்ள மக்களையும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டவை ஆகும்.   வினாடி வினா, நிபுணர்களின் நேர்காணல் மற்றும் தேர்தல் ஆணையத்தின் எஸ்விஇஇபி (முறையான வாக்காளர்களின் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு) குழு தயாரித்த பாடல்கள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒலிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியில் மக்கள் கேள்வி மூலமோ அல்லது ஆலோசனை வழியாகவோ பங்கேற்கும் அம்சமும் இடம்பெறும்.

**************

PKV/AG/SRI/IDS

 

 


(Release ID: 1867617) Visitor Counter : 272