பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
11 OCT 2022 5:47PM by PIB Chennai
வணக்கம் சகோதரர்களே!
குஜராத்தின் சுகாதார வசதிகளுக்கு இது ஒரு மகத்தான நாள் . பூபேந்திர பாய், அவரது அமைச்சரவை சகாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உலகின் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட பலன்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு ஆகியவை குஜராத் மக்களுக்கு கிடைக்கச் செய்வதன் மூலம் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும். இந்த மருத்துவச் சலுகைகள் கிடைப்பதால், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லமுடியாதவர்கள், அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லலாம். அங்கு உடனடியாக சேவை செய்ய மருத்துவக் குழுக்கள் அனுப்பப்படும். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, 1200 படுக்கை வசதியுடன் கூடிய தாய் மற்றும் குழந்தைகள் நல அதிநவீன பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கும் நல்வாய்ப்பை நான் பெற்றுள்ளேன்.
நண்பர்களே!
சிறுநீரக நோய் சிகிச்சை மையம் மற்றும் இதய சிகிச்சைக்கான யுஎன் மேத்தா மையம் ஆகியவற்றின் சேவை மற்றும் திறன்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி கழகத்தின் புதிய கட்டிடத்தில் மேம்படுத்தப்பட்ட எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை போன்ற வசதிகளும் உள்ளன. சைபர்-நைஃப் போன்ற அதிநவீன தொழில்நுட்பம் கிடைக்கும் நாட்டின் முதலாவது அரசு மருத்துவமனை இதுவாகும். வளர்ச்சியின் புதிய உச்சத்தை குஜராத் வேகமாக அடைந்து வருகிறது. குஜராத்தின் வளர்ச்சி வேகத்தை, சில நேரங்களில் கணக்கிடுவது கூட கடினமாக உள்ளது.
சகோதர, சகோதரிகளே,
20-25 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் சுகாதாரத் துறையின் பின்தங்கிய நிலை, தவறான கல்வி, மின் பற்றாக்குறை, தவறான நிர்வாகம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் போன்றவை நிலவியது. இவை அனைத்தையும் பின்னுக்கு தள்ளி குஜராத் இன்று முன்னேறி வருகிறது. அதி நவீன மருத்துவமனைகளில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, குஜராத்துக்கு இன்று எந்தப் போட்டியும் இல்லை. குஜராத் முன்னேறி வருகிறது. புதிய வளர்ச்சிப் பாதைகளை அடைகிறது. அதேபோல், குஜராத்தில் தண்ணீர், மின்சாரம், சட்டம்-ஒழுங்கு ஆகியவை பெரிதும் மேம்பட்டுள்ளன. குஜராத்திற்காக அனைவருடன், அனைவரின் நலனுக்காக, அனைவரின் நம்பிக்கை மற்றும் முயற்சியுடன் அரசு இன்று அயராது உழைத்து வருகிறது.
நண்பர்களே!
இன்று திறக்கப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பு திட்டங்கள் குஜராத்திற்கு புதிய அடையாளத்தை அளித்துள்ளது. இந்த திட்டங்கள் குஜராத் மக்களின் திறன்களுக்கான சின்னங்களாக விளங்கும். நல்ல சுகாதார வசதிகளுடன், உலகின் தலைசிறந்த மருத்துவ வசதிகளும் தற்போது நமது மாநிலத்தில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதை குஜராத் மக்கள் பெருமை அடைவார்கள். இது குஜராத்தின் மருத்துவ சுற்றுலாத் திறனுக்கும் பங்களிக்கும்.
நல்ல சுகாதார உள்கட்டமைப்பிற்காக எண்ணம் மற்றும் கொள்கைகள் இரண்டும் இணைந்திருக்க வேண்டும். அரசு மனப்பூர்வமான நோக்கத்துடன் மக்கள் பிரச்சனைகளில் அக்கறை செலுத்தவில்லை என்றால், பொருத்தமான சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவது சாத்தியமில்லை. ஒட்டுமொத்த அணுகுமுறையுடன் முழு மனதுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, அவற்றின் முடிவுகள் சமமாக பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும். இது குஜராத்தின் வெற்றி மந்திரம்.
பழைய பொருத்தமற்ற அமைப்புகளை நோக்கத்துடனும், பலத்துடனும் களையெடுத்துள்ளது. இரண்டாவது 'மருந்து' அதாவது அமைப்பை வலுப்படுத்துவதற்கான எப்போதும் புதிய கண்டுபிடிப்புகள், மூன்றாவது 'கவனிப்பு' அதாவது சுகாதார அமைப்பின் வளர்ச்சிக்காக உணர்வுபூர்வமாக பணியாற்றுதல். விலங்குகள் மீது அக்கறை கொண்ட முதல் மாநிலமாக குஜராத் உள்ளது. நோய்கள் மற்றும் தொற்றுநோய்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு பூமி ஒரு சுகாதார இயக்கம் பலப்படுத்தப்பட வேண்டும். அரசு அக்கறையுடன் செயல்பட்டது. நாங்கள் மக்கள் மத்தியில் சென்று, அவர்களின் இக்கட்டான நிலையைப் பகிர்ந்து கொண்டோம். பொதுமக்கள் பங்கேற்பின் மூலம் அவர்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்த அமைப்பு ஆரோக்கியமாக மாறியபோது, குஜராத்தின் சுகாதாரத் துறையும் ஆரோக்கியமானதுடன், நாட்டிலேயே குஜராத் முன்மாதிரியாக பேசப்படுகிறது.
குஜராத்தில் இருந்து கற்றுக்கொண்டதை மத்திய அரசின் ஆட்சியில் தாம் பயன்படுத்தியதாக தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளில், மத்திய அரசு நாட்டின் பல்வேறு பகுதிகளில் 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை கட்டியுள்ளது. இதன் மூலம் குஜராத்தும் பயனடைந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் முதலாவது மருத்துவமனை ராஜ்கோட்டில் அமைந்துள்ளது. மருத்துவ ஆராய்ச்சி, உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மருந்து ஆராய்ச்சி ஆகியவற்றில் குஜராத் சிறந்து விளங்குகிறது. மற்றும் உலகளவில் அது பெயர் விளங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
அரசு உணர்வு பூர்வமாக செயல்பட்டால், நலிந்த பிரிவினர் மற்றும் சமுதாயத்தின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் உள்ளிட்ட சமூகம் மிகப்பெரிய பலனைப் பெறுகின்றனர். சிசு இறப்பு விகிதம் மற்றும் தாய் - சேய் இறப்பு விகிதம் அரசுக்கு பெரும் கவலையாக இருந்த காலம் உண்டு. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களுக்கு முந்தைய அரசுகள், விதியை குற்றம் சாட்டின. நமது தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான நிலைப்பாட்டை எடுத்தது எங்களுடைய அரசுதான். கடந்த இருபது ஆண்டுகளில், நாங்கள் தேவையான கொள்கைகளை உருவாக்கி, அவற்றை செயல்படுத்தியதன் விளைவாக, இறப்பு விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளது. பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற இயக்கத்தின் காரணமாக தற்போது புதிதாகப் பிறக்கும் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தகைய வெற்றிகளுக்கு குஜராத் அரசின் ‘சிரஞ்சீவி’ மற்றும் ‘கில்கிலாஹத்’ போன்ற கொள்கைகளே காரணம். குஜராத்தின் வெற்றிகளும், முயற்சிகளும் மத்திய அரசின் ‘இந்திரதனுஷ்’ மற்றும் ‘மாத்ரு வந்தனா’ போன்ற பணிகளுக்கு வழி காட்டுகின்றன.
நண்பர்களே!
ஏழைகள் மற்றும் தேவை உடையவர்களின் சிகிச்சைக்காக ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இரட்டை எந்திர அரசாங்கம் ஏழைகளின் சுகாதாரத் தேவைகளுக்கு சேவை செய்கிறது. உடல்நலம் மற்றும் கல்வி ஆகிய இரண்டு துறைகள் மட்டுமே நிகழ்காலத்தை மட்டுமல்ல, எதிர்கால திசையை தீர்மானிக்கும். 2019 ஆம் ஆண்டில் 1200 படுக்கை வசதியுடன் கூடிய குடிமை மருத்துவமனை ஒரு வருடத்திற்குப் பிறகு உலகையே தாக்கிய கொவிட்-19 தொற்றுநோயின் போது அது மிகப்பெரிய சுகாதார மையமாக உருவெடுத்து மக்களுக்கு சேவை செய்தது. தொற்றுநோயின் போது அந்த ஒற்றை சுகாதார உள்கட்டமைப்பு ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியது. தற்போதைய சூழல்களை மேம்படுத்துவதுடன் எதிர்காலத்திற்காகவும் பணியாற்ற வேண்டியது அவசியமாகும். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
**************
(Release ID: 1866878)
(Release ID: 1867362)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam