பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
அரசு – தனியார் – பங்கேற்பு முறையின் கீழ், கட்டுதல், செயல்படுத்துதல், மாற்றுதல் அடிப்படையில் காண்ட்லாவின் கட்ச் வளைகுடாவில் உள்ள துனா – தெக்ராவுக்கு அப்பால் பன்னோக்கு சரக்கு ஏற்றுமதி – இறக்குமதி கப்பல்கள் நங்கூரமிடும் தளத்தை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
12 OCT 2022 4:17PM by PIB Chennai
அரசு – தனியார் – பங்கேற்பு முறையின் கீழ், கட்டுதல், செயல்படுத்துதல், மாற்றுதல் அடிப்படையில் காண்ட்லாவின் கட்ச் வளைகுடாவில் உள்ள துனா – தெக்ராவுக்கு அப்பால் பன்னோக்கு சரக்கு ஏற்றுமதி – இறக்குமதி கப்பல்கள் நங்கூரமிடும் தளத்தை மேம்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மொத்த செலவு ரூ.2250.64 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செலவில் பன்னோக்கு சரக்கு ஏற்றுமதி-இறக்குமதி கப்பல்கள் நங்கூரமிடும் தளத்தின் மேம்பாட்டுக்கான ரூ.1719.22 கோடி செலவை சலுகை உரிமையாளர் ஏற்றுக்கொள்வார். நங்கூரமிடும் தளத்திற்கு இருபக்கங்களிலும் தூர்வாருதல், திருப்புவதற்கான வட்டப் பகுதிகள் அமைத்தல், அணுகு பாதையை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். பொதுவாக பயன்படுத்துவதற்கான வழி மற்றும் சாலைக் கட்டமைப்புக்கு ரூ.531.42 கோடி செலவை சலுகை உரிமையாளர் ஆணையம் (தீன்தயாள் துறைமுக ஆணையம்) ஏற்கும்.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது 2026 –ல் சரக்கு போக்குவரத்து 2.85 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கும். 2030-க்குள் இதன் அளவு 27.49 ஆண்டுக்கு மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1867077
**************
(Release ID: 1867259)
Visitor Counter : 184
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam