பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

“பெண்குழந்தைகள் திறமையானவர்கள்” - மரபுசாரா வாழ்வாதார வழிகளில் பெண்களுக்கான திறன்கள் குறித்த தேசிய மாநாட்டை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாளை நடத்துகிறது

Posted On: 10 OCT 2022 10:54AM by PIB Chennai

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பெண்குழந்தைகள் திறமையானவர்கள் என்ற தலைப்பின்கீழ், பாரம்பரியமற்ற வாழ்வாதாரங்களில் பெண்களுக்கான திறன்கள் குறித்த தேசிய மாநாட்டை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், 2022 அக்டோபர் 11-ம் தேதி நடத்துகிறது. அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்வதை உறுதி செய்ய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை இந்த மாநாடு வலியுறுத்துகிறது. இந்த மாநாட்டில், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் மற்றும் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் ஆகியவை இடையே இளம் பெண்களின் திறன் மேம்பாட்டுக்கான  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைழுத்தாக உள்ளன. மிஷன் சக்தி வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் விளைவாக திட்டத்தை செயல்படுத்துவதற்கான மாநிலம்/மாவட்டங்களுக்கான, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் செயல்பாடு கையேடும் இந்த மாநாட்டில் வெளியிடப்படவுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம், சிறுபான்மையினர் விவகார அமைச்சகம், விளையாட்டுத்துறை, கல்வி மற்றும் குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய கவுன்சில் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதிலுமிருந்து இளம் பெண்கள் உள்ளிட்ட மகளிர் இந்த மாநாட்டை வழிநடத்துகின்றனர். மகள்கள் திறமையானவர்கள்  மாநாடு www.youtube.com/c/MinistryofWomenChildDevelopmentGovtofIndia என்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

மாநாட்டின் பிற முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி.ஸ்மிருதி ஜுபின் இரானி மரபுசாரா வாழ்வாதார வழிகளில் முத்திரை பதித்து வரும் பெண்களுடன் கலந்துரையாட உள்ளனர்
  • பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட செயல்பாடு கையேடு வெளியிடப்படும்
  • வாழ்க்கை மற்றும் வேலை வாய்ப்பு திறன்கள், தொழில் முனைவோர் திறன்கள், டிஜிட்டல் மற்றும் நிதித்துறை கல்வியறிவு திறன்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் 21-ஆம் நூற்றாண்டின் திறன்கள் குறித்து திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் மற்றும் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் ஆகியவற்றின் உறுதிமொழிகள் அறிவிப்பு
  • திறன் பயிற்சியில் சிறந்து விளங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களின் செயல்பாடுகளை பகிர்தல்

*************

KG/SV/IDS



(Release ID: 1866470) Visitor Counter : 222