பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிராவின் நாசிக்கில் நிகழ்ந்த பேருந்து விபத்திற்கு பிரதமர் இரங்கல்
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகை அறிவிப்பு
Posted On:
08 OCT 2022 9:43AM by PIB Chennai
மகாராஷ்டிராவின் நாசிக்கில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் பதிவிட்டிருப்பதாவது:
“நாசிக்கில் நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்தால் மிகுந்த வருத்தமடைந்தேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் உள்ளூர் நிர்வாகம் செய்து வருகிறது: பிரதமர் @naremdramodi”
“பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 அளிக்கப்படும்: பிரதமர் @naremdramodi”
*************
(Release ID: 1865994)
Visitor Counter : 152
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam