சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பிஎச் தொடரின் திருத்தத்திற்கான நகல் அறிவிக்கை
Posted On:
07 OCT 2022 11:22AM by PIB Chennai
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 2021 ஆகஸ்ட் 26 அன்று பிஎச் தொடர் பதிவு குறியீட்டை அறிமுகம் செய்தது. இதற்கான விதிகளில் திருத்தம் செய்து 2022 அக்டோபர் 4 அன்று நகல் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த விதிகளை அமலாக்கும் போது, பிஎச் தொடர் பதிவு குறியீட்டை வலுப்படுத்துவதற்கு பல யோசனைகள் பெறப்பட்டன.
பிஎச் தொடர் அமலாக்கத்தின் முயற்சிகளை மேலும் மேம்படுத்தவும், விரிவுப்படுத்தவும் கீழ்காணும் முக்கிய அம்சங்களுடன் புதிய விதிகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
- பிஎச் தொடர் பதிவு குறியீட்டுடனான வாகனங்களை பிஎச் தொடருக்கு தகுதி பெற்றவர் அல்லது தகுதி பெறாத மற்றவர்களுக்கு மாற்றப்படுவது ஏற்கப்படும்.
- தற்போது வழக்கமான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் தேவையான வரியை செலுத்தும்பட்சத்தில் பிஎச் தொடர் குறியீட்டுக்கு மாற்றப்படும்.
- குடிமக்களுக்கான வாழ்க்கையை மேலும் எளிதாக்கும் வகையில், பிஎச் தொடருக்கான விண்ணப்பத்தை வீட்டிலிருந்தோ அல்லது வேலை செய்யும் இடத்திலிருந்தோ சமர்ப்பிக்க வகை செய்யும் விதத்தில் விதி 48ல் திருத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், தனியார் துறையின் ஊழியர்களால் சமர்ப்பிக்கப்பட்ட செயல்திற சான்றிதழ் மேலும் வலுப்படுத்தப்படும்.
**************
(Release ID: 1865829)
Visitor Counter : 309