பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலம் வதோதராவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகை அறிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2022 4:49PM by PIB Chennai
குஜராத் மாநிலம் வதோதராவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வேதனையும், இரங்கலும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50 ஆயிரமும் கருணைத்தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“வதோதரா மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் . உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகையாக வழங்கப்படும்."
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1865158)
வருகையாளர் எண்ணிக்கை : 194
இந்த வெளியீட்டை படிக்க:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam