பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பொருட்கள் ஏலத்திற்கு’ அளிக்கப்பட்ட ஆர்வத்திற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 28 SEP 2022 5:40PM by PIB Chennai

பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பொருட்கள் ஏலத்திற்கு’ அளிக்கப்பட்ட ஆர்வத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஏலத்தில் எடுக்கப்பட்ட பொருட்களை பார்த்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அதனை பரிசளிக்குமாறு அனைவரையும் குறிப்பாக, இளைஞர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்; “கடந்த சில நாட்களுக்கு மேலாக  நடத்தப்பட்ட பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பொருட்கள் ஏலத்திற்கு அளிக்கப்பட்ட  ஆர்வத்தை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.” புத்தகங்கள் முதல் கலைப்பொருட்கள், கோப்பைகள், மண்பாண்டங்கள், பித்தளைப்பொருட்கள் என நான் பெற்ற அனைத்து பரிசுப் பொருட்களும் ஏலம் விடப்பட்டன. https://pmmementos.gov.in/#/

 “பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பொருட்கள் ஏலத்தில் கிடைக்கப்பெற்ற தொகை கங்கை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும்.  ஏலத்தில் எடுக்கப்பட்ட பொருட்களை பார்த்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அதனை பரிசளிக்குமாறு அனைவரையும் குறிப்பாக, இளைஞர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

**************  

(Release ID: 1863023)

IR-RS-SG

 


(रिलीज़ आईडी: 1863112) आगंतुक पटल : 229
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Manipuri , Odia , Telugu , Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Malayalam