பிரதமர் அலுவலகம்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் அரசு மரியாதையுடனான இறுதிச்சடங்கில் பிரதமர் பங்கேற்றார்

Posted On: 27 SEP 2022 4:34PM by PIB Chennai

டோக்கியோவின் நிப்பான் புடோக்கானில் நடைபெற்ற ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் அரசு மரியாதையுடனான இறுதிச்சடங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த இறுதிச்சடங்கில் 20க்கும் அதிகமான அரசுத் தலைவர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அன்பான நண்பராகவும், இந்தியா – ஜப்பான் நட்புறவின் மகத்தான தலைவராகவும், கருதிய முன்னாள் பிரதமர் அபேயின் நினைவுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்.

அரசு மரியாதையுடனான இறுதிச்சடங்கை தொடர்ந்து அக்காசாக்கா அரண்மனையில் மறைந்த பிரதமர் அபேயின் மனைவி திருமதி அக்கி அபேயை பிரதமர் சந்தித்தார். திருமதி அபேயிடம் தமது இதயம் நெகிழ்ந்த இரங்கலை தெரிவித்தார். தமது அன்பான நட்புறவையும், இந்தியா-ஜப்பான் நட்புறவை புதிய உச்சங்களுக்கு  கொண்டு செல்வதில் முன்னாள் பிரதமர் அபேயின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும், பிரதமர் நினைவுகூர்ந்தார். இதன் பின்னர் தமது இரங்கலை தெரிவிக்க பிரதமர் கிஷிடாவுடன் சுருக்கமாக
திரு மோடி கலந்துரையாடினார்.

**************

(Release ID: 1862568)

SMB/Giri/SM(Release ID: 1862620) Visitor Counter : 111