குடியரசுத் தலைவர் செயலகம்
இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த க்ரயோஜெனிக் எஞ்சின் உற்பத்தி வசதியை குடியரசு தலைவர் திறந்து வைத்தார் - மண்டல நச்சுஇயல் ஆய்வகத்துக்கு(தென்மண்டலம்) அடிக்கல் நாட்டினார்
Posted On:
27 SEP 2022 1:26PM by PIB Chennai
குடியரசு தலைவர் திருமதி.திரௌபதி முர்மு, பெங்களூரூவில் இன்று (2022 செப்டம்பர் 27) இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த க்ரயோஜெனிக் எஞ்சின் உற்பத்தி மையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சின்போது, அவர் மண்டல நச்சுஇயல் ஆய்வகத்துக்கு (தென்மண்டலம்) அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு தலைவர், ஒருங்கிணைந்த க்ரயோஜெனிக் எஞ்சின் உற்பத்தி மையம் திறந்து வைத்திருப்பது, இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றுக்கு மட்டுமின்றி, நாடு முழுமைக்கும் க்ரயோஜெனிக் மற்றும் செமி க்ரயோஜெனிக் எஞ்சின்கள் உற்பத்திக்கான அதிநவீன வசதியை கொண்டிருப்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என்று தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக விவகாரத்தில் இந்தியாவின் தன்னம்பிக்கைக்கு இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனம் பெரும் பங்காற்றியிருப்பதாக குறிப்பிட்டார். இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனம் படைகளுக்கு பின்னால் இயங்கும் சக்தி என்று கூறலாம். பல்வேறு விமான தளங்களின் ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனம் மீண்டும், மீண்டும் தனது திறனை நிரூபித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் நாட்டின் பெருமை என்று குடியரசு தலைவர் பாராட்டு தெரிவித்தார். 1960-களில் இந்நிறுவன் செயல்பட தொடங்கியபோது, இந்தியா மிக சிறிய குடியரசாக இருந்தது. கடும் வறுமை, கல்வியறிவின்மை போன்ற பல்வேறு சவால்களை இந்தியா எதிர்கொண்டாலும், அபரிமிதமான ஆற்றலை கொண்டிருந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக வளர்ச்சியின் வேகமானது, தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி பெற்ற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இதன் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு, க்ரயோஜெனிக் உற்பத்தி திறன் கொண்ட உலகின் ஆறாவது நாடாக இந்தியாவை மாற்றியுள்ளது.
இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனமும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமும் இணைந்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருகின்றன என்று குடியரசு தலைவர் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்த உதவும் பல்வேறு கருவிகள் மற்றும் திட்டங்களை மேம்படுத்துவதில் இந்த இரண்டு நிறுவனங்களும் முக்கியப் பங்கு வகித்துள்ளன. பாதுகாப்பு தொடர்பாக கருவிகளை உற்பத்தி செய்யும் இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனம் நம் நாட்டின் விலை மதிப்பற்ற சொத்து என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862493
**************
KG/SM
(Release ID: 1862618)
Visitor Counter : 222