பிரதமர் அலுவலகம்
நவராத்திரியை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 SEP 2022 10:09AM by PIB Chennai
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நவராத்திரியின் தொடக்கத்தில் திரு.மோடி ஷைலபுத்ரி தேவியிடம் பிரார்த்தனை செய்தார். மேலும், அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், தெய்வத்தின் அருள் கிடைக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
“சக்தி வழிபாட்டின் சிறந்த திருவிழாவான நவராத்திரியில் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். நம்பிக்கையின் மங்கலகரமான இந்த நாளில், உங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய ஆற்றலும், உற்சாகமும் உண்டாகட்டும். ஜெய் மாதா”
நவராத்திரி விழா இன்று முதல் ஷைலபுத்ரி தேவி வழிபாட்டுடன் தொடங்குகிறது. அவரது அருளால் அனைவரது வாழ்வும் மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், சிறந்த ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டுகிறேன்”.
**************
(Release ID: 1862187)
(வெளியீட்டு அடையாள எண்: 1862210)
வருகையாளர் எண்ணிக்கை : 207
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam