பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைப்பு

Posted On: 23 SEP 2022 12:31PM by PIB Chennai

ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் கீழ் 4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களில் மருத்துவ குணம் உள்ள 1.10 லட்சம் செடிகள் நடப்பட்டுள்ளன.

ஊட்டச்சத்து மாதம் 2022 அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ஊட்டச்சத்து தோட்டங்கள் அல்லது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள தோட்டங்களில் கோழி பண்ணை/ மீன்பிடி பிரிவுகளை அமைக்கும் பணிகள் நாடு முழுவதும் விமர்சையாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இது தொடர்பாக 1.5 லட்சம்  நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், சிறுதானியங்கள் மற்றும்  சமையலறை தோட்டம் அமைப்பது குறித்து 75 ஆயிரத்திற்கும் அதிகமான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. புதிய அங்கன்வாடி மையங்களிலோ அல்லது அவற்றுக்கு அருகிலோ ஊட்டச்சத்து தோட்டங்களை அமைப்பதற்கு இடங்களை தேர்வு செய்ய 40,000 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861686

**************



(Release ID: 1861716) Visitor Counter : 231