தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

“அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் அனைவரின் நம்பிக்கை”- பிரதமரின் தெரிவு செய்யப்பட்ட உரைகளின் தொகுப்பு நூல் வெளியீடு

Posted On: 22 SEP 2022 10:23AM by PIB Chennai

புதுதில்லி ஆகாசவாணி பவனில் உள்ள ரங்பவன் கலையரங்கில் 2022 செப்டம்பர் 23 காலை 11 மணியளவில் “அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் அனைவரின் நம்பிக்கை”- பிரதமர் திரு நரேந்திர மோடியின் தெரிவு செய்யப்பட்ட உரைகளின் (2019 மே-2020 மே) தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவிற்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டு பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விழாவில் தலைமை விருந்தினராக கேரள மாநில ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான், கவுரவ விருந்தினராக  முன்னாள் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்து கொள்வார்கள்.  மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வா சந்திரா மற்றும் பல்வேறு ஊடகப்பிரிவுகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.

2019 மே மாதத்தில் இருந்து 2020 மே மாதம் வரை பிரதமரின் 86 உரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. 10 தலைப்புகளிலான இந்த உரைகள் புதிய இந்தியாவுக்கான  பிரதமரின் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கின்றன.  

இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் இந்த நூல்கள் நாடு முழுவதும் உள்ள மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டு பிரிவில் விற்பனைக்கு கிடைக்கும்.  வெளியீட்டு பிரிவில் இணைய தளம் மூலமாகவும் இந்த புத்தகங்களை வாங்க முடியும்.  அமேசான், கூகுள் ப்ளே ஆகியவற்றிலும் இந்த புத்தகங்கள் கிடைக்கும்.

  மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1861378

**************



(Release ID: 1861493) Visitor Counter : 165