சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
டாக்டர்.மன்சுக் மாண்டவியா இந்திய செஞ்சிலுவை சங்க மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைக் கூட்டத்தை தொடங்கி வைத்தார்
Posted On:
22 SEP 2022 12:49PM by PIB Chennai
“சேவை மற்றும் உதவி நமது மரபின் ஒரு பகுதியாகும். மேலும் இவை நமது பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இதுவே இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் குறிக்கோளை அடிக்கோடிட்டு வரையறுக்கின்றன”. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சரும், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவருமான டாக்டர். மன்சுக் மாண்டவியா, இந்திய செஞ்சிலுவை சங்க மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைக் கூட்டத்தை இன்று தொடங்கி வைத்தபோது இதனை தெரிவித்தார். இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிப்பதே இந்த இரண்டுநாள் முகாமின் நோக்கம்.
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சிறப்பான பணிக்கு பாராட்டுத் தெரிவித்த டாக்டர். மன்சுக் மாண்டவியா, செஞ்சிலுவை சங்கம் மக்களுக்கு, நம்பிக்கை என்ற அடிப்படையில் அடையாளப்படுத்தப்படுவதாக தெரிவித்தார். இது நம்பகத்தன்மை மற்றும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
கொவிட் பெருந்தொற்று காலத்தில், இந்திய சுகாதார மேம்பாடுகள் குறித்து பேசிய அமைச்சர், “நாம் எப்போதும் பிற நாடுகளின் சுகாதார வசதிகளால் ஈர்க்கப்படுகிறோம். ஆனால், கொவிட் தொற்று நமது நாட்டின் வலிமையையும், வளர்ந்த நாடுகளின் பலவீனத்தையும் வெளிப்படுத்தியது. இந்தியா, வெற்றிகரமான பிராந்திய மாதிரிகள் மூலம் கொவிட் தொற்றை நிர்வகித்தது மட்டுமில்லாமல், உலக நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கொடுத்து உதவியது.
எங்கள் மருந்துகள் தரத்தில் குறையவில்லை என்பதும், அதிக விலைக்கு விற்க சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் பாராட்டுக்குரியது. இது வசுதைவ குடும்பகத்தின் தத்துவத்தை நாம் மிக ஆழமாக கடைப்பிடிப்பதை பிரதிபலிக்கிறது” என்றும் குறிப்பிட்டார்.
இந்திய செஞ்சிலுவை சங்க செயல்பாடுகளின் எல்லையை விரிவுப்படுத்துவது தொடர்பாக பங்கேற்பாளர்களிடமிருந்து ஆலோசனைகளை டாக்டர். மாண்டவியா வரவேற்றார். சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான முயற்சிகள் பற்றிய தங்கள் சிந்தனைகளை பங்கேற்பாளர்கள் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டனர்.
**************
Release ID: 1861434
KG/SM
(Release ID: 1861488)
Visitor Counter : 146