பிரதமர் அலுவலகம்

விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி கௌஷல் தீக்ஷாந்த் சமரோவில் பிரதமர் காணொலி மூலம் உரையாற்றினார்


"தொழில்துறை பயிற்சி நிறுவனத்தின் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் திறன் பட்டமளிப்பு நிகழ்வில் இன்று வரலாறு படைக்கப்பட்டுள்ளது"

"உண்மையான அர்த்தத்தில் கடினமாக உழைக்கும் ஒவ்வொருவருக்கும் உழைப்பாளர் தினமான விஸ்வகர்மா ஜெயந்தி மரியாதை"

"இந்தியாவில், உழைப்பாளியின் திறமைகளில் கடவுளின் சித்தரிப்பை நாம் எப்போதும் காண்கிறோம், அவர்கள் விஸ்வகர்மாவின் வடிவத்தில் காணப்படுகிறார்கள்"

"இந்த நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற, இந்திய இளைஞர்கள் கல்வியிலும் திறமையிலும் சமமான தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்"

"ஐ.டி.ஐ.யில் தொழில்நுட்ப பயிற்சி பெற்ற இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடு"

"இதில் ஐடிஐகளின் பங்கு மிகவும் முக்கியமானது, நமது இளைஞர்கள் இந்த வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்"

"இந்தியா திறமைகளில் தரம் மற்றும் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது"

"ஒரு இளைஞனுக்கு கல்வியின் ஆற்றல் மற்றும் திறமையின் ஆற்றல் இருந்தால், அவனது தன்னம்பிக்கை தானாகவே அதிகரிக்கிற

Posted On: 17 SEP 2022 3:57PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் முதல் முறையாக கௌஷல் தீக்ஷாந்த் சமரோவில் தொழில்துறை பயிற்சி நிறுவன மாணவர்களிடம் உரையாற்றினார். இத்திட்டத்தில் சுமார் 40 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

 

நிகழ்ச்சியில்  உரையாற்றிய பிரதமர், 21ஆம் நூற்றாண்டில் இந்தியா முன்னேறி வரும் நிலையில், 40 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தொழில் பயிற்சி நிறுவனத்தில் 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் திறன் பட்டமளிப்பு விழா மூலம் இன்று வரலாறு படைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். விஸ்வகர்மாவின் பிறந்தநாளில் மாணவர்கள் தங்கள் திறமையால் புதுமையின் பாதையில் முதல் அடி எடுத்து வைக்கிறார்கள் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். "உங்கள் ஆரம்பம் எவ்வளவு இனிமையாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு உங்கள் நாளைய பயணமும் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்", என்றார்.

 

விஸ்வகர்மா ஜெயந்தி குறித்து விளக்கிய பிரதமர், இது கண்ணியம் மற்றும் திறமைக்கான விழா என்று கூறினார். சிற்பி ஒருவர் கடவுள் சிலையை உருவாக்குவதை ஒப்பிட்டுப் பேசிய பிரதமர், இன்று விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்களின் திறமைகள் கவுரவிக்கப்படுவதும், அங்கீகரிக்கப்படுவதும் நமக்கெல்லாம் பெருமிதம் தருவதாகக் கூறினார். "உண்மையான அர்த்தத்தில் கடினமாக உழைக்கும் ஒவ்வொரு நபருக்கும் விஸ்வகர்மா ஜெயந்தி மரியாதை, அது உழைப்பின் நாள்", என பிரதமர் தொடர்ந்தார், "இந்தியாவில், உழைப்பாளியின் திறமையில் கடவுளின் சித்தரிப்பை நாம் எப்போதும் பார்த்திருக்கிறோம், அவர்கள் விஸ்வகர்மாவின் வடிவில் பார்க்கப்பட்டனர். அவர்கள் வைத்திருக்கும் திறமையில் எங்கோ கடவுளின் அம்சம் உள்ளது என்று திரு மோடி விளக்கினார். "கௌசலாஞ்சலி" போன்று இந்த நிகழ்வு விஸ்வகர்மாவுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்துவது போன்றது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.

 

கடந்த எட்டு ஆண்டுகளில் அரசின் சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், விஸ்வகர்மாவின் உத்வேகத்துடன் இந்தியா புதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது என்றும் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து 'ஷ்ரமேவ் ஜெயதே' பாரம்பரியத்தை புதுப்பிக்க முயற்சிப்பதாகவும் கூறினார். "இந்த நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற, இந்திய இளைஞர்கள் கல்வியிலும் திறமையிலும் சமமான தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்" என்று பிரதமர் குறிப்பிட்டார். இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கும், புதிய நிறுவனங்களை உருவாக்குவதற்கும் அரசாங்கம் முதன்மையான முன்னுரிமை அளித்து வருவதாக திரு மோடி மேலும் கூறினார். “நம் நாட்டில் முதல் ஐடிஐ 1950 இல் நிறுவப்பட்டது. அடுத்த ஏழு தசாப்தங்களில், 10 ஆயிரம் ஐடிஐக்கள் உருவாக்கப்பட்டன. எங்கள் ஆட்சியின் 8 ஆண்டுகளில், நாட்டில் சுமார் 5 ஆயிரம் புதிய ஐடிஐக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் ஐடிஐக்களில் 4 லட்சத்துக்கும் அதிகமான புதிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன” என்று பிரதமர் கூறினார்.

 

ஐடிஐகள் தவிர, தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள், இந்திய திறன்கள் நிறுவனம் மற்றும் ஆயிரக்கணக்கான திறன் மேம்பாட்டு மையங்களும் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன என்பதை பிரதமர் விளக்கினார். பள்ளி அளவில் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 5000க்கும் மேற்பட்ட திறன் மையங்களை அரசு திறக்க உள்ளதாகவும் பிரதமர் கூறினார். புதிய தேசிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்த பிறகு, அனுபவ அடிப்படையிலான கற்றலும் ஊக்குவிக்கப்பட்டு, திறன் படிப்புகள் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

 

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐடிஐக்கு வருபவர்கள் தேசிய திறந்தநிலைப் பள்ளி மூலம் 12ஆம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழை எளிதாகப் பெறுவார்கள் என்று மாணவர்களுக்குத் தெரிவித்தபோது பிரதமர் மகிழ்ச்சி வெளியிட்டார். "இது உங்களுக்கு  மேலும் படிக்க வசதியாக இருக்கும்" என்று திரு மோடி  கூறினார். ஐ.டி.ஐ.யில் தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் உள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

நான்காவது தொழில் புரட்சியின் சகாப்தமான 'தொழில்துறை 4.0' பற்றிப் பேசிய பிரதமர், இந்தியாவின் வெற்றியில் தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டார். காலப்போக்கில் வேலையின் தன்மை மாறிவருகிறது, எனவே, நமது ஐடிஐகளில் படிக்கும் மாணவர்களும் ஒவ்வொரு நவீன படிப்பின் வசதியையும் பெற வேண்டும் என்பதில் அரசு சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். ஐடிஐக்களில் கோடிங், ஏஐ, ரோபோடிக்ஸ், 3டி பிரிண்டிங், ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் டெலிமெடிசின் தொடர்பான பல படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சூரிய சக்தி மற்றும் மின்சார வாகனங்கள் துறையில் இந்தியா முன்னணியில் இருப்பதால், இதுபோன்ற துறைகள் தொடர்பான படிப்புகள் நமது பல ஐடிஐக்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். "உங்களைப் போன்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது எளிதாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் ஆப்டிகல் ஃபைபர் வழங்கும் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் லட்சக்கணக்கான பொது சேவை மையங்களைத் திறப்பது பற்றிப் பேசிய பிரதமர், நாட்டில் தொழில்நுட்பம் விரிவடைந்து வருவதால், வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருவதாகக் கூறினார். ஐ.டி.ஐ.,யில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கிராமங்களில் அதிகளவில் வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்றார். "கிராமத்தில் மொபைல் பழுதுபார்க்கும் பணியாக இருந்தாலும் சரி, விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம் தொடர்பான பணியாக இருந்தாலும் சரி, உரம் தெளிப்பதாக இருந்தாலும் சரி, ஆளில்லா விமானங்கள் மூலம் மருந்து வழங்கினாலும் சரி, கிராமப்புற பொருளாதாரத்தில் இதுபோன்ற பல புதிய வேலைகள் சேர்க்கப்படுகின்றன" என்று பிரதமர் குறிப்பிட்டார். இதில் ஐடிஐகளின் பங்கு மிக முக்கியமானது, இந்த சாத்தியக்கூறுகளை நமது இளைஞர்கள் அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார். இதேபோன்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஐ.டி.ஐ.க்களை மேம்படுத்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.

திறன் மேம்பாட்டுடன், இளைஞர்களுக்கு மென் திறன்களும் சமமாக முக்கியம் என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். ஒரு வணிகத் திட்டத்தை உருவாக்குதல், வங்கியில் கடன் பெறுவதற்கான திட்டங்கள், தேவையான படிவங்களை நிரப்புதல் மற்றும் புதிய நிறுவனத்தைப் பதிவு செய்தல் போன்ற விஷயங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளடக்கப்பட்டதாக திரு மோடி எடுத்துக்காட்டுகளைக் கூறினார். “அரசாங்கத்தின் இந்த முயற்சிகளின் விளைவு, இன்று, இந்தியா திறமைகளில் தரம் மற்றும் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் உலகத் திறன் போட்டிகளில் பல பெரிய பரிசுகளை வென்றுள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.

திறன் மேம்பாடு குறித்து விரிவாகப் பேசிய பிரதமர், “ஒரு இளைஞனுக்கு கல்வி மற்றும் திறன் ஆற்றல் இருந்தால், அவனது தன்னம்பிக்கை தானாகவே அதிகரிக்கிறது. இளைஞர்கள் திறன்களுடன் வெளிவரும்போது, இந்த சுயதொழில் உணர்வை ஆதரிக்க, தனது வேலையை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்த யோசனையைப் பெறுகின்றனர். உத்தரவாதமின்றி கடன் வழங்கும் முத்ரா யோஜனா, ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் ஸ்டாண்டப் இந்தியா போன்ற திட்டங்களின் பயனை பிரதமர் எடுத்துரைத்தார்.

"இலக்கு முன்னால் உள்ளது, நீங்கள் அந்த திசையில் செல்ல வேண்டும். இன்று நாடு உங்கள் கையைப் பிடித்துள்ளது, நாளை நீங்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்” என்று பிரதமர் வலியுறுத்தினார். விடுதலையின் அமிர்த காலத்தில், இந்தியாவிற்கு அடுத்த 25 ஆண்டுகளைப் போலவே நமது வாழ்வின் அடுத்த 25 ஆண்டுகளும் முக்கியமானவை என்று அவர் கூறினார். “நீங்கள் அனைவரும் மேக் இன் இந்தியா மற்றும் உள்ளூர் பிரச்சாரத்தின் தலைவர்கள். நீங்கள் இந்தியாவின் தொழில்துறையின் முதுகெலும்பு போன்றவர்கள், எனவே வளர்ந்த தற்சார்பு இந்தியாவின் உறுதியை நிறைவேற்றுவதில் உங்களுக்கு பெரிய பங்கு உள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

உலக அளவில் உள்ள வாய்ப்புகளை எடுத்துரைத்த பிரதமர், உலகின் பல பெரிய நாடுகளுக்கு அவர்களின் கனவுகளை நிறைவேற்றவும், தங்கள் வேகத்தைத் தக்கவைக்கவும் திறமையான பணியாளர்கள் தேவை என்று கூறினார். நாட்டிலும் வெளிநாட்டிலும் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று திரு மோடி குறிப்பிட்டார். “மாறும் உலகளாவிய சூழ்நிலையில், இந்தியா மீதான உலகத்தின் நம்பிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்தில் கூட, இந்தியாவின் திறமையான பணியாளர்களும், அதன் இளைஞர்களும் மிகப்பெரிய சவால்களுக்கு எவ்வாறு தீர்வுகளை வழங்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். சுகாதார சேவைகள் அல்லது ஹோட்டல்-மருத்துவமனை நிர்வாகம், டிஜிட்டல் தீர்வுகள் அல்லது பேரிடர் மேலாண்மை துறையில் இந்தியர்கள் தங்கள் திறமை காரணமாக ஒவ்வொரு நாட்டிலும் முத்திரை பதிக்கிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் தனது உரையின் முடிவில், அவர்களின் எதிர்காலத்திற்கு அடிப்படையாக இருக்கும் திறன்களை தொடர்ந்து மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். "திறமைகள் என்று வரும்போது, உங்கள் மந்திரம் 'திறன், 'மீண்டும் திறன்' மற்றும் 'அதிகரிப்பு' என்று இருக்க வேண்டும்!" என்று திரு மோடி குறிப்பிட்டார். புதிய திறன்களைக் கற்றுக் கொள்ளவும், அவர்களின் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் பிரதமர் மாணவர்களை வலியுறுத்தினார். "இந்த வேகத்தில் நீங்கள் முன்னேறுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன், மேலும் உங்கள் திறமையால், புதிய இந்தியாவின் சிறந்த எதிர்காலத்திற்கு நீங்கள் வழிகாட்டுவீர்கள்" என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

**************



(Release ID: 1860191) Visitor Counter : 176