குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

காதி தயாரிப்புகளை பிரபலப்படுத்த, ஆவர்த்தன் என்ற இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு காதி உயர் சிறப்பு மையம் ஏற்பாடு

Posted On: 15 SEP 2022 10:52AM by PIB Chennai

 மக்களுடன் இணையும் முயற்சியில், ஆவர்த்தன் என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியை செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பெங்களூரூவில் உள்ள பெங்களூரு சர்வதேச மையத்தில் காதி உயர் சிறப்பு மையம் நடத்தவுள்ளது.

 இளம் பார்வையாளர்கள் மற்றும் சர்வதேச சந்தையுடன் இணையும் நோக்கத்தோடு, காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்திற்கு ஆதரவளிப்பதற்காக தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்துடன் இணைந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகம் காதி உயர் சிறப்பு மையத்தை உருவாக்கியது.

 காதி உயர் சிறப்பு மையத்தின் வடிவமைப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஆடைகள் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படும். தங்களது துணி வகைகள் மற்றும் புடவைகளை சந்தைப்படுத்த வருமாறு காதி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காதி மற்றும் அதன் நுணுக்கங்கள் தொடர்பாக செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கலந்துரையாடல் அமர்வில் பங்கேற்க பெங்களூருவில்  உள்ள வடிவமைப்பு கல்லூரிகளின் மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

 காதி தயாரிப்புகளை அதிக மக்களிடம் எடுத்துச் சென்று, காதி பொருட்களை இதர கலை வடிவங்களுடன் ஒருங்கிணைத்து காதி உணர்வை' முன்னெடுத்துச் செல்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். கண்காட்சிகளின் வாயிலாக இளைஞர்களுடன் காதி தயாரிப்புகளை இணைத்து தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தும் வாய்ப்பை காதி நிறுவனங்களுக்கு வழங்குவதில் இந்நிகழ்ச்சி கவனம் செலுத்தும்.

 மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1859441

********



(Release ID: 1859477) Visitor Counter : 163