மத்திய அமைச்சரவை
இந்தியாவில் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை (2022) நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
14 SEP 2022 3:58PM by PIB Chennai
இந்தியாவில் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை (2022) நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
17 வயதுக்குட்பட்டவர்களுக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி (2022) இந்தியாவில் அக்டோபர் 11ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இளைஞர்கள் பங்கேற்கும் இப்போட்டியின் ஏழாவது பகுதி முதன் முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது.
தேசிய விளையாட்டு கூட்டமைப்புக்கான உதவித் திட்டத்தின் கீழ் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு ரூ. 10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகளிரிடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கவும், மகளிர் கால்பந்து விளைாட்டிற்கான தரத்தை மேம்படுத்தவும் இப்போட்டி நடத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1859189
**************
(रिलीज़ आईडी: 1859228)
आगंतुक पटल : 348
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada