பிரதமர் அலுவலகம்

கடமைப் பாதையைத்’ தொடங்கி வைத்து, இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவச் சிலையை பிரதமர் திறந்த வைப்பு

Posted On: 08 SEP 2022 9:36PM by PIB Chennai

 கடமைப் பாதையைபிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அதிகாரத்தின் குறியீடாக இருந்த முந்தைய ராஜபாதை, கடமைப் பாதையாக மாறுவது பொதுமக்களின் உடைமை மற்றும் அதிகாரத்திற்கான உதாரணத்தை அடையாளப்படுத்துகிறது. இந்த நிகழ்வின்போது இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவச்சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “கடந்த காலத்தை விட்டு விலகி, எதிர்காலத்திற்கான கண்ணோட்டத்தை பல நிறங்களில் இன்று நாம் நிறைத்துள்ளோம். இன்று இந்த புதிய ஒளியை எல்லா இடங்களிலிருந்தும் காண முடிகிறது, இதுதான் புதிய இந்தியாவின் நம்பிக்கையின் ஒளி”, என்று கூறினார். அடிமைத்தனத்தின் சின்னமான ராஜபாதை இன்று முதல் வரலாறாகியுள்ளது. கடமைப் பாதை' என்ற வடிவத்தில் இன்று ஓர் புதிய வரலாறு உருவாகியுள்ளது. விடுதலையின் அமிர்த காலத்தில் அடிமைத்தனத்தின் மற்றொரு அடையாளத்தில் இருந்து விடுதலை கிடைத்திருப்பதற்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றும் அவர் கூறினார்.

நமது தேசத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரம்மாண்டமான உருவச்சிலை இந்தியா கேட் அருகே இன்று நிறுவப்பட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். எந்த ஒரு நாடும் தனது ஒளிமயமான கடந்த காலத்தை ஒருபோதும் மறக்கக்கூடாது என்று கூறிய அவர், இந்தியாவின் வளமான வரலாறு ஒவ்வொரு இந்தியரின் ரத்தத்திலும், பாரம்பரியத்திலும் வேரூன்றி இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான சட்டங்களை இன்று நாடு மாற்றம் செய்துள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்ற காலத்தை ஒட்டி இருந்து வந்த இந்திய நிதிநிலை அறிக்கையின் நேரமும், தேதியும் பல தசாத்தங்களுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டது. அந்நிய மொழிகளைப் பயிலும் கட்டாயத்திலிருந்து தேசிய கல்விக் கொள்கையின் வாயிலாக நம் இளைஞர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அதாவது நாட்டு மக்களின் எண்ணங்களும் செயல்பாடுகளும் அடிமை போக்கிலிருந்து விடுதலை பெற்றுள்ளன”, என்று அவர் மேலும் தெரிவித்தார்.

புதிதாகக் கட்டப்பட்டுள்ள கடமைப் பாதையைக் காண வருமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்து, பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி, சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, கலாச்சாரத்துறை இணையமைச்சர்கள் திரு அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் திருமதி மீனாட்சி லேகி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு கௌசல் கிஷோர் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

 இது குறித்த மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857900

--------



(Release ID: 1857988) Visitor Counter : 167