வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா என்றால் வாய்ப்புகள்; இது, இந்தியாவின் தசாப்தம் மட்டுமல்ல இந்தியாவிற்கான நூற்றாண்டு: சான் ஃபிரான்சிஸ்கோவில் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
Posted On:
07 SEP 2022 9:15AM by PIB Chennai
‘இந்தியா’ என்பது 'வாய்ப்புகளைக்’ குறிப்பதாகவும், இது, இந்தியாவிற்கு உகந்த தசாப்தம் அல்ல, இந்தியாவிற்கான நூற்றாண்டு என்றும் மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு வணிக பட்டதாரி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இன்று உரையாடும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விரைவான மாற்றம் ஏற்பட்டு, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து, அமைப்புமுறைகளை மேம்படுத்தி, தொழில்நுட்பம் சார்ந்த, உலகின் தலைசிறந்தவற்றிலிருந்து கற்றுக் கொள்ளும் வகையில் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா சிறந்த அடித்தளத்தை உருவாக்கி இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்திய குடிமக்கள் அனைவரும் தரமான வாழ்க்கை மற்றும் வளமான எதிர்காலத்தைப் பெறுவதற்கு உரிமை உள்ளவர்கள் என்ற உறுதியை அளிப்பதற்காக நாடு கடுமையாக உழைத்து வருகிறது என்றார் அவர்.
கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 675 பில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்தது என்று குறிப்பிட்ட திரு பியூஷ் கோயல், 2030-ஆம் ஆண்டிற்குள் சர்வதேச வர்த்தகத்தை 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவில் உயர்த்துவதை நாடு லட்சியமாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். தனது 100-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும்போது 30 டிரில்லியன் அமெரிக்க டாலராக இந்தியாவின் பொருளாதாரம் இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, சில தலைசிறந்த நிர்வாகக் கொள்கைகளின் அடிப்படையில் இந்தியாவின் எதிர்காலத்திற்கான தமது தொலைநோக்குப் பார்வையையும், திட்டங்களையும் வெளிப்படுத்தியதாக திரு கோயல் கூறினார். அந்த வகையில், மிக விலை உயர்ந்த எல்.இ.டி விளக்குகளை வாங்குவதற்கான மானியத்தைத் திரும்பப்பெறும் பிரதமரின் முடிவை, எல்.இ.டி விளக்குகளை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சியில் முக்கிய தருணமாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857277
**************
(Release ID: 1857330)
Visitor Counter : 192