பிரதமர் அலுவலகம்

எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படுவதாக பிரதமர் அறிவிப்பு

Posted On: 05 SEP 2022 7:01PM by PIB Chennai

ஆசிரியர் தினத்தையொட்டி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின்  பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

இதன் மூலம் பள்ளிகள் நவீனப்படுத்தப்பட்டு கல்வி முறையில் பெரும் மாற்றம் கொண்டுவரப்படும். புதிய தேசியக் கல்விக் கொள்கையின் விளைவாக  எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின்  பள்ளிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைவார்கள் என்று திரு மோடி கூறினார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

“ஆசிரியர் தினமான இன்று, எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின்  பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் நான் அறிவிக்கிறேன். புதிய தேசிய கல்விக் கொள்கையின் விளைவாக இப்பள்ளிகள் நவீனப்படுத்தப்படும்”

இதன் மூலம் இப்பள்ளிகள் நவீனப்படுத்தப்பட்டு கல்வி முறையில் பெரும் மாற்றம் கொண்டுவரப்படும்.  கண்டுபிடிப்பு சார்ந்த கற்றலை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். புதிய தொழில்நுட்பம், நவீன வகுப்பறைகள், விளையாட்டு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நவீன உள்கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்தப்படும்."

"அண்மை ஆண்டுகளில் தேசிய கல்விக் கொள்கை மூலம்  கல்வித் துறையை மாற்றம் ஏற்பட்டுள்ளது.  புதிய கல்விக் கொள்கையின் விளைவாக எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின்  பள்ளிகள் திட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் நாடு முழுவதும் பயனடைவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

*****



(Release ID: 1856910) Visitor Counter : 220