ரெயில்வே அமைச்சகம்

இந்திய ரயில்வே, ஆகஸ்ட் '22-ல் 119.32 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு சிறந்த சாதனையை பதிவு செய்துள்ளது

Posted On: 05 SEP 2022 11:14AM by PIB Chennai

இந்திய ரயில்வே, ஆகஸ்ட் “22-ல் 119.32 மெட்ரின் டன் சரக்குகளை ஏற்றி சென்று, சிறந்த சாதனையை பதிவு செய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், கூடுதலாக 8.69 மெட்ரின் டன் சரக்குகள் ஏற்றி செல்லப்பட்டுள்ளது. இது கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, 7.86 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம் இந்திய ரயில்வே, கடந்த 24 மாதங்களாக, சிறந்த மாதாந்தர சரக்குப் போக்குவரத்தை பதிவு செய்துள்ளது.

இந்திய ரயில்வே 9.2 மெட்ரின் டன் நிலக்கரி, 0.71 மெட்ரின் டன் உரம், 0.68 மெட்ரின் டன் பிற பொருட்கள் 0.62 மெட்ரின் டன் சரக்குப் பெட்டகங்களை கையாண்டுள்ளது. 2022-23-ஆம் நிதியாண்டில் வாகன உதிரிபாகங்கள் கையாளப்பட்டிருப்பது சரக்கு வணிகத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். 2022-23-ம் நிதியாண்டு ஆகஸ்ட் வரை, 2206 ரேக்குகள் ஏற்றி செல்லப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஏற்றப்பட்ட 1314 ரேக்குகளுடன் ஒப்பிடும்போது, 68 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

2022 ஏப்ரல் 1 முதல் 2022 ஆகஸ்ட் 31 வரையிலான சரக்குப் போக்குவரத்து 620.87 மெட்ரிக் டன்னாக உள்ளது. இது 2021-22-ம் ஆண்டில் எட்டப்பட்ட 562.72 மெட்ரிக் டன்களில் இருந்து, 58.11 மெட்ரிக் டன் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்துடன் ஒப்பிடும்போது, இது 10 சதவீதம் வளர்ச்சி ஆகும்.  

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1856737

**************



(Release ID: 1856767) Visitor Counter : 163