நிதி அமைச்சகம்

2022 ஆகஸ்ட் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,43,612 கோடி

Posted On: 01 SEP 2022 11:46AM by PIB Chennai

2022 ஆகஸ்ட் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய்  ரூ.1,43,612 கோடியாகும்.  இதில் மத்திய ஜிஸ்டி ரூ.24,710 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.30,951 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (இறக்குமதி பொருட்கள் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.42,067 கோடி உட்பட) ரூ.77,782 கோடி, கூடுதல் வரி (செஸ்) ரூ.10,168 கோடி (இறக்குமதி பொருட்கள் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.1,018 கோடி உட்பட).

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யிலிருந்து மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ.29,524 கோடியையும், மாநில ஜிஎஸ்டி-க்கு  ரூ.25,119 கோடியையும் அரசு வழங்கியுள்ளது. முறைப்படியான  பைசலுக்கு பின், 2022 ஆகஸ்ட் மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி-க்கான  வருவாய் ரூ.54,234 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி-க்கான வருவாய் ரூ.56,070 கோடியாகவும் இருந்தது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,12,020 கோடி என இருந்த நிலையில், இந்த ஆண்டு வருவாயில் 28 சதவீதம் உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தைவிட பொருட்கள் இறக்குமதி மூலமான வருவாய் 57 சதவீதமும் உள்நாட்டு பரிவர்த்தனை மூலமான வருவாய் (சேவைகள் இறக்குமதி உட்பட) 19 சதவீதமும் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில், 2021 ஆகஸ்ட் மாதத்தில் 7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வருவாய், 2022 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.8,386 கோடியாகி 19 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. புதுச்சேரியில் 2021 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.156 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வருவாய், 2022 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.200 கோடியாகி 28 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855967

------ 



(Release ID: 1855996) Visitor Counter : 261