சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பல்லுயிர் பாதுகாப்புத் துறையில் இந்தியா - நேபாளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2022 12:17PM by PIB Chennai

வனங்கள், வனவிலங்குகள், சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு, வழித்தடங்கள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கும் பகுதிகளை மீட்டெடுப்பது உள்ளிட்ட பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி விரிவுபடுத்துவது, இரு நாடுகளுக்கிடையே அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது என்ற கண்ணோட்டத்துடன் நேபாள அரசுடன் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் முன்மொழிவுக்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  

 

வனங்கள், வனவிலங்குகள், சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு, வழித்தடங்கள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கும் பகுதிகளை மீட்டெடுப்பது உள்ளிட்ட பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளில் இரு தரப்பினரிடையே  ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தப்  புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.

 **************


(வெளியீட்டு அடையாள எண்: 1855734) வருகையாளர் எண்ணிக்கை : 222
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam