இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் விளையாட்டு விருதுகள் 2022 க்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது
Posted On:
27 AUG 2022 6:20PM by PIB Chennai
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. 2022 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் அறிவிப்பு www.yas.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கம்/இந்திய விளையாட்டு ஆணையம்/அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள்/ விளையாட்டு மேம்பாட்டு வாரியங்கள்/ மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் போன்றவையும் இவ்வாறு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுக்குத் தகுதியான விளையாட்டு வீரர்கள் / பயிற்சியாளர்கள் / நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆண்டு முதல், இதற்கு மட்டுமேயான இணையப்பக்கம் மூலம் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருது வழிகாட்டுதல்கள்படி தகுதியான விண்ணப்பதாரர்கள், ஆணையங்கள்/நபர்களின் பரிந்துரையின்றி, ஆன்லைனில் dbtyas-sports.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே சுயமாக விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், விண்ணப்பதாரர் விளையாட்டுத் துறையை sp4-moyas[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் ஐடி பிரிவில் அல்லது 011-23387432 என்ற தொலைபேசி எண்ணில் எந்த வேலை நாளிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்பு கொள்ளலாம். விருதுக்குத் தகுதியான விளையாட்டு வீரர்களின் விண்ணப்பம் 2022 செப்டம்பர் 20 ஆம் தேதி இரவு 11.59 மணிக்குள் dbtyas-sports.gov.in என்ற இணையப்பக்கத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செயதிக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1854853
•••••••••••••
(Release ID: 1854881)