பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 25 AUG 2022 11:08AM by PIB Chennai

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என்று திரு மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் நடந்த விபத்து நெஞ்சை உருக்குகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் குணமடைய  பிரார்த்தனை. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்; பிரதமர் ‘’
 

*************** 

(Release ID: 1854265)


(வெளியீட்டு அடையாள எண்: 1854318) வருகையாளர் எண்ணிக்கை : 217