பிரதமர் அலுவலகம்

பானிபட்டில் 2- ஜி எத்தனால் ஆலையின் துவக்க விழாவில் பிரதமரின் உரை

Posted On: 10 AUG 2022 7:31PM by PIB Chennai

ஹரியானா ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரேயா அவர்களே, என்னது அமைச்சரவை நண்பர்களான திரு நரேந்திர சிங் தோமர் அவர்களே, திரு ஹர்தீப்  சிங் புரி அவர்களே, திரு ராமேஸ்வர் தெளி அவர்களே, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை, இதர பிரமுகர்களே, சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் இனிய உலக உயிரி எரிபொருள் தின வாழ்த்துகள்.

பானிபட், ஹரியானா உட்பட நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இன்றைய நிகழ்வு மிகவும் முக்கியமானது. பானிபட்டியில் உள்ள இந்த நவீன எத்தனால் ஆலை, உயிரி எரிபொருள் ஆலையாக மாறியுள்ளது, வெறும் துவக்கமே. தில்லி-தேசிய தலைநகர் பகுதி மற்றும் ஒட்டுமொத்த ஹரியானாவில் இந்த ஆலை மாசை வெகுவாகக் குறைக்க உதவும். ஹரியானாவின் வீரர், வீராங்கனைகள் காமன்வெல்த் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு, நாட்டிற்கு பெருமை தேடித் தந்ததோடு, பதக்கங்களையும் பெற்றுத் தந்துள்ளனர்.

நண்பர்களே,

இயற்கையை வணக்கும் நமக்கு, உயிரி எரிபொருள் என்பது இயற்கையை பாதுகாப்பதற்கு ஒப்பாகும். நம்மைப் பொறுத்தவரை உயிரி எரிபொருள் என்பது பசுமை எரிபொருளாகவோ, அல்லது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் எரிபொருளாகவோ கருதப்படுகிறது. பானிபட் உயிரி எரிபொருள் ஆலை, பயிர் கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்தும். இதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உருவாவதோடு, பசுமை தொழில்கள் துறை வலுவடையும். பயிர் கழிவுகள் எரிவதில் இருந்து பூமி பாதுகாக்கப்படும். விவசாயிகளுக்கு சுமையாக இருந்து வந்த பயிர் கழிவுகள், அவர்களுக்கு கூடுதல் வருமானமாக தற்போது மாறியுள்ளது. மாசு குறைவதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விவசாயிகளின் பங்களிப்பு அதிகரிக்கும். இறுதியாக, நாட்டிற்கு மாற்று எரிபொருள் கிடைக்கும்.

நண்பர்களே,

அரசியல் லாபங்களுக்காக குறுக்கு வழிகளை நாடுபவர்களால் பிரச்சனைகளை நிரந்தரமாக ஒருபோதும் தீர்க்க இயலாது. எனவேதான் குறுக்கு வழிகளை நாடாமல் நமது அரசு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதில் கவனம் செலுத்துகிறது. பயிர் கழிவுகள் குறித்த விவசாயிகளின் பிரச்சினைகளை நாங்கள் அறிந்ததால் தான் அவற்றை சுலபமாக அப்புறப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் அவர்களுக்கு வழங்குகிறோம்.

பயிர் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நாம் நிதி உதவி அளிக்கிறோம். இது சம்பந்தமான நவீன இயந்திரங்களை வாங்குவதற்கு 80 சதவீதம் வரை மானியமும் வழங்கப்பட்டது. தற்போது பானிபட்டில் உள்ள இந்த உயிரி எரிபொருள் ஆலை, பயிர் கழிவுகள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுக்கான உதவப் போகிறது. விவசாய நிலங்களில் இருந்து வரும் கழிவுகள் மற்றும் பசு, எருமைகளின் கழிவுகளை அகற்றுவதற்கு கோபரதன் என்ற மற்றொரு திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.

நண்பர்களே,

உரங்கள், ரசாயனங்கள், சமையல் எண்ணெய், கச்சா எண்ணெய் அல்லது எரிவாயு ஆகட்டும் சுதந்திரம் பெற்றது முதல் பல தசாப்தங்களாக இது போன்ற பொருட்களுக்காக நாம் வெளிநாடுகளில் மிக அதிக அளவில் சார்ந்துள்ளோம். கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த பிரச்சனைக்குத் நிரந்தர தீர்வு காண நாடு பணியாற்றி வருகிறது. ‘விடுதலையின் அமிர்த காலத்தில்' தற்சார்பு இந்தியா என்ற உறுதிபாட்டை நோக்கி நாடு வேகமாக முன்னேறுகிறது. கடந்த 7-8 ஆண்டுகளில் பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் காரணமாக வெளிநாடுகளை சார்ந்து இருக்காமல் 50000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாளை ரக்ஷா பந்தன் என்ற புனித பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஒரு குடிமகனாக நாட்டிற்கான கடமைகளை நிறைவேற்ற நாம் உறுதி ஏற்க வேண்டும். இத்துடன் என் உரையை நிறைவு செய்கிறேன். மிக்க நன்றி.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

****



(Release ID: 1850617)



(Release ID: 1852808) Visitor Counter : 145