மத்திய அமைச்சரவை
சர்வதேச அஞ்சல் சங்கத்தின் சட்டவிதிகளின் 11-வது கூடுதல் நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
10 AUG 2022 6:05PM by PIB Chennai
அபித்ஜானில், 9-27 ஆகஸ்ட் 2021-ல் நடைபெற்ற சர்வதேச அஞ்சல் சங்கத்தின் 27-வது மாநாட்டில் கையெழுத்தான சட்ட விதிகளில் இடம்பெற்றுள்ள 11-வது கூடுதல் நடைமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, சர்வதேச அஞ்சல் சங்கத்தின் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதல் மூலம் இந்திய அஞ்சல் துறை, குடியரசுத் தலைவரால் கையெழுத்திடப்பட்ட “ஒப்புதல் ஆணை” பெறுவதுடன், அதனை சர்வதேச அஞ்சல் சங்கத்தின் சர்வதேச அமைப்பின் தலைமை இயக்குனரிடம் ஒப்படைக்கும்.
இது சர்வதேச அஞ்சல் சங்க விதிகளில் இடம்பெற்றுள்ள விதிமுறை 25 மற்றும் 30-ல் எழும் கடமைகளை நிறைவேற்றும்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1850576
***************
(Release ID: 1850632)
Visitor Counter : 236
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam