நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வின் இரண்டு தவணைகளை மத்திய அரசு விடுவிப்பு; வழக்கமான மாதாந்திர தொகையான ரூ. 58,332.86 கோடிக்கு பதிலாக, ரூ. 1,16,665.75 கோடி விடுவிக்கப்பட்டது; தமிழகத்திற்கு ரூ. 4,758.78 கோடி

प्रविष्टि तिथि: 10 AUG 2022 1:08PM by PIB Chennai

மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வின் வழக்கமான மாதாந்திர தொகையான ரூ. 58,332.86 கோடிக்கு பதிலாக, இரண்டு தவணைகளுக்குரிய ரூ. 1,16,665.75 கோடியை இன்று (ஆகஸ்ட் 10, 2022) மத்திய அரசு விடுவித்துள்ளது.

மாநில அரசுகள் தங்களது மூலதனம், வளர்ச்சி செலவுகளை உயர்த்துவதற்கு அதிகாரம் அளிக்கும் இந்திய அரசின் உறுதிபாட்டின்படி இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்திற்கு ரூ. 4,758.78 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1850445

***************


(रिलीज़ आईडी: 1850484) आगंतुक पटल : 321
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam