தேர்தல் ஆணையம்
“நமது தேர்தல்களை உள்ளடக்கிய, எளிதில் அணுகக்கூடிய மற்றும் பங்கேற்பு” உடையதாக ஆக்குவது குறித்த ஆசிய மண்டல அமைப்பின் கூட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு
Posted On:
10 AUG 2022 11:56AM by PIB Chennai
“நமது தேர்தல்களை உள்ளடக்கிய, எளிதில் அணுகக்கூடிய மற்றும் பங்கேற்பு” உடையதாக ஆக்குவது குறித்த ஆசிய மண்டல அமைப்பின் கூட்டத்தை ஆகஸ்ட் 11, 2022 அன்று காணொலி வாயிலாக புதுதில்லியில் உள்ள நிர்வச்சன் சதனில் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. மெக்ஸிகோ தேசிய தேர்தல் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள “ஜனநாயகத்திற்கான உலக மாநாடு”-க்கு முன்னோடியாக இந்த மண்டல அமைப்பின் கூட்டம் நடைபெறவுள்ளது. உலக நாடுகளில் உள்ள தேர்தல் அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதுடன், உலகில் தேர்தல் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக அறிவுசார் மற்றும் அமைப்பு ரீதியான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த உலக மாநாடு மற்றும் மண்டல கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ்குமார், தேர்தல் ஆணையர் திரு அனூப் சந்திர பாண்டே ஆகியோர் ஆசிய மண்டல கூட்டத்திற்கு தலைமையேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் மெக்ஸிகோ, மொரீஷியஸ், பிலிப்பைன்ஸ், நேபாளம், உஸ்பெகிஸ்தான், மாலத்தீவு மற்றும் சர்வதேச IDEA, உலகத் தேர்தல் அமைப்புகளின் சங்கம் மற்றும் தேர்தல் நடைமுறைகளுக்கான சர்வதேச அறக்கட்டளையின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1850418
***************
(Release ID: 1850466)
Visitor Counter : 193