பிரதமர் அலுவலகம்
மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட சோகமான விபத்து காரணமான உயிரிழப்புகளுக்கு பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து கருணைத் தொகை அறிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
09 AUG 2022 10:24PM by PIB Chennai
மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தில் ஏற்பட்ட சோகமான விபத்து காரணமான உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து கருணைத் தொகையையும் திரு மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:-
“மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தில் ஏற்பட்ட சோகமான விபத்து காரணமான உயிரிழப்புகளுக்கு கவலை அடைந்தேன். காயமடைந்தவர்களுக்கு பிரார்த்தனைகள்.
உயிரிழந்தோர் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்: பிரதமர்”
***************
(रिलीज़ आईडी: 1850399)
आगंतुक पटल : 155
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam