பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 08 AUG 2022 8:20AM by PIB Chennai

 பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும்  காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;  கிரிக்கெட்டையும், இந்தியாவையும் பிரிக்க இயலாது. நமது மகளிர் கிரிக்கெட் அணி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடி மதிப்புமிக்க வெள்ளிப்பதக்கத்தை தாய் நாட்டிற்கு கொண்டு வருகின்றனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் கிரிக்கெட் பிரிவில்   முதல் பதக்கம் வென்றது எப்பொழுதும் சிறப்பானதாக இருக்கும்.

 அணியில் இடம்பெற்றுள்ள அனைவரது ஒளிமயமான எதிர்காலத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

***************

(Release ID: 1849600)


(रिलीज़ आईडी: 1849658) आगंतुक पटल : 167
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam