பிரதமர் அலுவலகம்
வெண்கலப்பதக்கம் வென்ற லவ்ப்ரீத் சிங்குக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
03 AUG 2022 5:44PM by PIB Chennai
காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் பளு தூக்குதல் 109 கிலோ எடை பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற லவ்ப்ரீத் சிங்குக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆடவர் பளுதூக்குதல் 109 கிலோ எடை பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற திறமைமிக்க லவ்ப்ரீத் சிங்குக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
அமைதியான மனநிலையுடனும், விளையாட்டு அர்ப்பணிப்புடனும் உள்ள இளைஞரும், ஆற்றல்மிக்கவருமான லவ்ப்ரீத் ஒவ்வொருவரையும் ஈர்த்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அவர் பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வாழ்த்துவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
-------
(வெளியீட்டு அடையாள எண்: 1848069)
வருகையாளர் எண்ணிக்கை : 222
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam