பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அமைப்பு தினத்தை முன்னிட்டு சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 27 JUL 2022 9:02AM by PIB Chennai

மத்திய ரிசர்வ் காவல் படையின் (சி.ஆர்.பி.எஃப்) அமைப்பு தினத்தை முன்னிட்டு அதன் வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“சி.ஆர்.பி.எஃப் @crpfindia வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அமைப்பு தின நல்வாழ்த்துகள். தனது அசைக்க முடியாத துணிச்சல், பிரத்யேகமான சேவையால் சி.ஆர்.பி.எஃப்,  தனித்துவம் வாய்ந்த படையாக விளங்குகிறது. பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதாக இருந்தாலும், மனிதாபிமான சேவைகளில் ஈடுபடுவதாக இருந்தாலும் சி.ஆர்.பி.எஃப்-ன் பணி, பாராட்டுக்குரியது.”

***************(Release ID: 1845232) Visitor Counter : 53