தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட 747 இணையதளங்கள், 94 யூடியூப் அலைவரிசைகள் 2021-22-ல் தடைசெய்யப்பட்டன

Posted On: 21 JUL 2022 4:14PM by PIB Chennai

 நாட்டின் நலனுக்கு எதிராக  செயல்பட்ட யூடியூப் அலைவரிசைகளுக்கு எதிராக 2021-22-ல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த திரு தாக்கூர், 94 யூடியூப் அலைவரிசைகள், 19 சமூக ஊடக கணக்குகள், 747 யூஆர்எல் ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை தடைசெய்யப்பட்டன என்றார். இந்த நடவடிக்கைகள் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, பிரிவு 69A-ன்  கீழ் எடுக்கப்பட்டன.

 தவறான செய்திகளை பரப்புவது மற்றும் இணையதளத்தில் அவற்றை பிரச்சாரம் செய்வதன் மூலம் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் முகமைகளுக்கு எதிராக அரசு வலுவான நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.

***************

(Release ID: 1843458)(Release ID: 1843542) Visitor Counter : 207