பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேச மாநிலம் தார் பகுதியில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்

Posted On: 18 JUL 2022 2:20PM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநிலம் தார் பகுதியில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-    

“மத்தியப் பிரதேச மாநிலம் தார் பகுதியில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 அளிக்கப்படும்: பிரதமர்”

***************

(Release ID: 1842341) 


(Release ID: 1842348) Visitor Counter : 198