நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

2022-23-ம் ஆண்டில் உயர் அளவாக விவசாயிகளிடமிருந்து 2.50 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

Posted On: 15 JUL 2022 1:59PM by PIB Chennai

கடந்த கால சாதனைகளை முறியடித்து, 2022-23-ம் ஆண்டில், கூடுதல் கையிருப்பு வைப்பதற்காக,  விவசாயிகளிடமிருந்து 2.50 லட்சம் டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. 2021-22-ல் 2.0 லட்சம் டன் கையிருப்பு வைக்கப்பட்டிருந்ததைவிட நடப்பு ஆண்டில், 0.50 சதவீதம் அதிகம். தற்போதைய ரபி அறுவடை பருவத்தில், விவசாயிகளுக்கு நிலையான வருவாய்க் கிடைப்பதற்காக கூடுதல் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மூலம், மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் வாயிலாக, விவசாயிகளிடமிருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது.

குறிப்பிட்ட திறந்தவெளி சந்தை விற்பனை மூலம் இருப்பு விடுவிக்கப்படும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அரசு முகவர்களுக்கு குறைவான (ஆகஸ்ட் - டிசம்பர்) மாதங்களில் சில்லரை விற்பனை நிலையங்கள் மூலமும் விநியோகம் செய்யப்படும். முந்தைய நாட்களை விட விலைவாசி அதிகமுள்ள மாநிலங்கள், நகரங்களில் ஒட்டுமொத்த இருப்பை அதிகரிப்பதை இலக்காக கொண்டு, திறந்த சந்தைகள் மூலம் விற்கப்படும்.

வெங்காய விவசாயிகளுக்கு லாபம் தரும் விலை கிடைப்பதற்கும், நுகர்வோருக்கு மலிவு விலையில் அதிகளவில் வெங்காயம் கிடைப்பதற்கும் விலை சந்தைப்படுத்துதல் உதவுகிறது. வெங்காயம், விரைவில் அழுகிப் போதல், எடை குறைதல், முளைத்தல் உள்ளிட்ட அறுவடைக்கு பிந்தைய பாதிப்புகளைக் கொண்டது. ஏப்ரல் - ஜுன் மாதங்களில் ரபி பருவத்தில் அறுவடை செய்யப்படும் வெங்காயம், இந்தியாவின் வெங்காய உற்பத்தியில் 65 சதவீத  பங்கு வகிக்கிறது. மேலும், அக்டோபர் - நவம்பர் முதல் கரீஃப் பருவ அறுவடைக் காலம் வரை நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்கிறது. எனவே, சீரான விநியோகத்தை உறுதி செய்ய வெங்காயத்தை சேமித்து வைப்பது இன்றியமையாதது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841730

                                 ***************



(Release ID: 1841780) Visitor Counter : 200