கூட்டுறவு அமைச்சகம்
100-வது சர்வதேச கூட்டுறவு தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா பங்கேற்றார்
Posted On:
04 JUL 2022 6:39PM by PIB Chennai
100-வது சர்வதேச கூட்டுறவு தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா பங்கேற்றார். இந் நிகழ்ச்சியில் பேசிய அவர், கூட்டுறவு இயக்கத்திற்கு வலிமையாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும், அதன் மீது வருங்கால தலைமுறையினர் வலிமையான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார். நாட்டின் 75வது சுதந்திர ஆண்டில் கூட்டுறவு துறைக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்தியதன் மூலம், கூட்டுறவு இயக்கத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்வை அர்ப்பணித்துள்ளதாகத் தெரிவித்தார்.
விடுதலைப் பெருவிழாவை கொண்டாடி வரும் நாம், 2047-ம் ஆண்டு கூட்டுறவு இயக்கம் மிக பெரும் இயக்கமாக மாற வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும் எனக் கூறினார். உலகில் 30 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் இருப்பதாகவும், அதில் எட்டு லட்சத்து 55 ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள் இந்தியாவில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 13 கோடி பேர் அதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாகவும், 91 சதவீத கிராமங்களில் அவர்கள் பணிபுரிவதாகவும் கூறினார்.
கூட்டுறவு முறை தோல்வி அடைந்தது என்று பலர் கூறிவரும் நிலையில், பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரிய பங்களிப்பாளராக கூட்டுறவுத்துறை திகழ்கிறது என்பதை சர்வதேச அறிக்கை தெரிவிப்பதாக அவர் கூறினார். தொடக்க காலத்திலிருந்தே கூட்டுறவு முறை இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என்றும், இது குறித்த முறையை உலகிற்கு இந்தியா அளித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் திரு அமித்ஷா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில் செய்திக்குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1839169
****
(Release ID: 1839183)
Visitor Counter : 172