கூட்டுறவு அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        100வது சர்வதேச கூட்டுறவு தினக் கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்
                    
                    
                        
100வது சர்வதேச கூட்டுறவு தினத்தின் கருப்பொருள் “கூட்டுறவுத்துறை மூலம் தற்சார்பு இந்தியாவையும்,  சிறந்த உலகையும் உருவாக்குதல்’’ என்பதாகும்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், மத்திய அரசு கூட்டுறவுத் துறையை 'சஹகர் சே சம்ரித்தி' என்ற மந்திரத்துடன் மேம்படுத்துகிறது.
தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களைக் கணினிமயமாக்க ஒப்புதல் அளித்து கூட்டுறவுத் துறையை மேலும் வலுப்படுத்த மத்திய அமைச்சரவை சமீபத்தில் முக்கிய முடிவை எடுத்துள்ளது
                    
                
                
                    Posted On:
                03 JUL 2022 11:10AM by PIB Chennai
                
                
                
                
                
                
                மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, ஜூலை 4ஆம் தேதி, புதுதில்லி விஞ்ஞான் பவனில், இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியம் இணைந்து நடத்தும் 100வது சர்வதேச கூட்டுறவு தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியம் என்பது கூட்டுறவுக் கல்வி மற்றும் பயிற்சியை மையமாகக் கொண்ட கூட்டுறவு இயக்கத்தின் ஒரு உச்ச அமைப்பாகும்.
 
100வது சர்வதேச கூட்டுறவு தினத்தின் கருப்பொருள் "கூட்டுறவு மூலம் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவது" என்பதாகும். சிறந்த உலகை உருவாக்குவதில் தற்சார்பு இந்தியாவின்  முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, கூட்டுறவு அமைச்சகம், என்சியுஐ ஆகியவை இதற்கு ஏற்பாடு செய்துள்ளன.
தற்சார்பு இந்தியாவின் அடிப்படைக் கருத்தும் தொலைநோக்கும் இந்தியப் பொருளாதாரத்தின் தன்னிறைவான, நிலையான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது; இந்தியாவின் கூட்டுறவு மாதிரி இதன் அடிப்படையில் அமைந்துள்ளது. 
இந்தியாவின் கூட்டுறவு இயக்கம் உலகிலேயே மிகப்பெரியதாகும்.. தற்போது, 90 சதவீத கிராமங்களை உள்ளடக்கிய 8.5 லட்சத்துக்கும் அதிகமான கட்டமைப்பைக் கொண்ட இந்தியாவில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ளடங்கிய வளர்ச்சிக்கான சமூக-பொருளாதார மேம்பாட்டைக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.அமுல், இஃப்கோ, கிரிப்கோ, நாஃபெட் போன்றவை. இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தின் வெற்றிக்கு சான்றுகளாக அமைந்துள்ளன.
 
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் கூட்டுறவுத் துறைக்கு சரியான உத்வேகத்தை அளிக்கும் வகையில், மத்திய அரசு 2021 ஜூலையில் கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியது. புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவு அமைச்சகத்தின் பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவிடம் வழங்கப்பட்டது. . அதன் உருவாக்கத்திற்குப் பிறகு, அமைச்சகம் ஒரு புதிய கூட்டுறவுக் கொள்கை மற்றும் திட்டங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
 
கூட்டுறவுத் துறையில் விவசாயிகள், விவசாயம் மற்றும் நாட்டின் கிராமப்புறங்களின் வளர்ச்சி மற்றும் அதிகாரமளிப்பதற்கான மகத்தான சாத்தியங்கள் உள்ளன. அதனால்தான் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அரசு கூட்டுறவுத் துறையை 'சஹகர் சே சம்ரித்தி' என்ற மந்திரத்துடன் வலுப்படுத்துகிறது.
 
தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களின் கணினிமயமாக்கலுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் கூட்டுறவுத் துறையை மேலும் வலுப்படுத்த மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. தொடக்க வேளாண்மை சங்கங்களின்  வணிகத்தை பல்வகைப்படுத்தவும் பல நடவடிக்கைகள்/சேவைகளை மேற்கொள்ளவும் உதவுகிறது. இந்தத் திட்டமானது 5 ஆண்டுகளில் சுமார் 63,000 செயல்பாட்டு சங்கங்களை கணினிமயமாக்க முன்மொழிகிறது. இதன் மொத்த பட்ஜெட் செலவு ரூ. 2,516 கோடியாகும்.
 
உலகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் 100வது சர்வதேச கூட்டுறவு தினத்தை கொண்டாடுகின்றன. கூட்டுறவு  பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பது, சர்வதேச ஒற்றுமை, பொருளாதார திறன், சமத்துவம் மற்றும் உலக அமைதி ஆகிய இயக்கத்தின் இலட்சியங்களை மேம்படுத்துவதுதான் சர்வதேச கூட்டுறவு தினத்தின் நோக்கம். கூட்டுறவுகள் 10 சதவீத மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன, மேலும் 300 பெரிய கூட்டுறவு நிறுவனங்கள் அல்லது 2,146 பில்லியன் டாலர் வருவாயை ஏற்படுத்தியுள்ளன.
 
மத்திய பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, கூட்டுறவுத்துறை இணையமைச்சர் திரு பி.எல். வர்மா உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.  , மற்றும் தலைவர், ICA-AP டாக்டர். சந்திர பால் சிங்கும் இந்த விழாவில் கலந்து கொள்வார். கூட்டத்திற்கு என்சியுஐ தலைவர் திலீப் சங்கனி தலைமை தாங்குகிறார்.                                 
***************
                
                
                
                
                
                (Release ID: 1838945)
                Visitor Counter : 1192