சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அமர்நாத் யாத்திரை வெற்றி பெற மத்திய சுகாதாரத் துறை எடுத்து வரும் நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
30 JUN 2022 4:29PM by PIB Chennai
அமர்நாத் யாத்திரை ஜூன் 30 (இன்று) முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வழிகாட்டுதல்படி பல்வேறு வசதிகள் பக்தர்களுக்கு செய்துத் தரப்பட்டுள்ளன.
பயணிகள் வரவு அதிகமுள்ள பகுதிகளில், ஜம்மு காஷ்மீர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மத்திய அரசு மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசு ஊழியர் சுகாதார சேவை மருத்துவமனைகளைச் சேர்ந்த இந்த மருத்துவர்கள் பல்வேறு பிரிவுகளாக பணியில் இருப்பார்கள். இதுவரை 176 மருத்துவமனைகள் பெயர் இதற்காக வரப்பெற்றுள்ளது. இந்த மருத்துவர்கள் 11 மாநிலங்களில் இருந்து இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், 50 படுக்கை வசதிக் கொண்ட 2 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன, மேலும், செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை பற்றி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பக்தர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கடந்த மே 4 – 6 தேதி வரை பயிற்சியாளர்களுக்கான பயிற்சியை நடத்தியது.
***************
(रिलीज़ आईडी: 1838313)
आगंतुक पटल : 186