பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
29 JUN 2022 3:41PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் திறனை அதிகரிப்பதற்கும், அதன் நடவடிக்கைகளில் வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்புடைமையை கொண்டு வருவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் வர்த்தக நடவடிக்கைகளையும் பல்வேறு சேவைகளையும் மேற்கொள்வதற்கு இதுவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 63,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்களை 5 ஆண்டுகளுக்குள் கணினி மயமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக 2516 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு 1528 கோடி ரூபாய் ஆகும். இந்த கடன் சங்கங்கள் மூலம் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் உள்பட 13 கோடி விவசாயிகள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837890
***************
(रिलीज़ आईडी: 1837947)
आगंतुक पटल : 616
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam