பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜெர்மனியின் முனிச்சில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்

प्रविष्टि तिथि: 26 JUN 2022 7:58PM by PIB Chennai

ஜெர்மனியின் முனிச்சில் உள்ள ஆடி டோமில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றி, அவர்களுடன் கலந்துரையாடினார். ஜெர்மனியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான துடிப்புமிக்க இந்திய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை எடுத்துரைத்த பிரதமர், நாட்டின் வளர்ச்சித் திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்முயற்சிகளையும் குறிப்பிட்டார். இந்தியாவின் வெற்றிப் பயணத்தை உலகிற்கு எடுத்துரைப்பதிலும், இந்த வெற்றியின் தூதர்களாக செயல்படுவதிலும்   வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பங்களிப்பை, பிரதமர் பாராட்டினார்.

******

(Release ID: 1837160)


(रिलीज़ आईडी: 1837271) आगंतुक पटल : 181
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam