இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட்டின் ஜோதி ஓட்ட நிகழ்வு தரம்சாலாவை வந்தடைந்தபோது அதை வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு அனுராக் தாக்கூர் ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் செஸ் விளையாட்டை பிரபலப்படுத்துவதற்கான பணிகள் அனைத்தையும் செய்வேன் என்று கூறினார்
Posted On:
22 JUN 2022 3:43PM by PIB Chennai
தரம்சாலாவில் இன்று காலை நடைபெற்ற முதலாவது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்ட நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தலைமை விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதன் முறையாக ஜோதி ஓட்ட நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 188 நாடுகளைச் சேர்ந்த 2000-த்திற்கும் மேற்பட்ட வீரர்களும்,1000-த்திற்கு மேற்பட்ட அதிகாரிகளும் இந்தியாவுக்கு வருகை தருவார்கள் என்று கூறினார். ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் செஸ் விளையாட்டை பிரபலப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வேன் என்று உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், தரம்சாலாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் தடகள வீரர்கள், நேரு யுவகேந்திர தன்னார்வலர்கள், ஹிமாச்சல் செஸ் கழகத்தைச்சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட 500 பேர் கலந்துகொண்டனர். செஸ் கிராண்ட் மாஸ்டர் தீப் சென்குப்தா, தான் வைத்திருந்த ஜோதியை திரு அனுராக் தாக்கூரிடம் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1836219
***************
(Release ID: 1836243)
Visitor Counter : 186