வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
2022 சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
20 JUN 2022 12:13PM by PIB Chennai
நடப்பாண்டு சர்வதேச யோகா தினம் விடுதலைப் பெருவிழாவின் போது கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆயுஷ் அமைச்சகம் நாடு முழுவதும் 75 முக்கிய இடங்களில் யோகா தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது. கர்நாடகா மாநிலம் மைசூருவில் நடைபெற உள்ள இதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் தலைமை ஏற்க உள்ளார்.
புதுதில்லி செங்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகா தின நிகழ்ச்சி மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், பதஞ்சலி யோகா பீடத்தைச் சேர்ந்த ஆச்சார்யா பால் கிருஷ்ணன், அமைச்சருடன் பங்கேற்க உள்ளார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் பதஞ்சலி யோகா பீடத்தைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரம் பேர் இதில் பங்கேற்க உள்ளனர். “மனித நேயத்திற்காக யோகா” என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1835441
******
(வெளியீட்டு அடையாள எண்: 1835473)
வருகையாளர் எண்ணிக்கை : 364