மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பள்ளிப் பாடத் திட்டத்தில் யோகாவை சேர்க்க மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் பரிந்துரை
Posted On:
18 JUN 2022 2:02PM by PIB Chennai
மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், தேசிய யோகா ஒலிம்பியாட்- 2022 மற்றும் வினாடி வினா போட்டியைத் தொடங்கி வைத்தார். மத்திய கல்வி இணையமைச்சர் திரு சுபாஷ் சர்க்காரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
மத்திய கல்வி அமைச்சகமும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலும் இணைந்து ஜூன் 18 முதல் 20-ஆம் தேதி வரை தேசிய யோகா ஒலிம்பியாட்-ஐ நடத்துகின்றன. இந்த ஆண்டு 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 600 மாணவர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு பிரதான், கொவிட் தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் இன்னல்களைப் போக்கவும், நெகிழ்தன்மையைக் கட்டமைக்கவும், மனித இனத்திற்கு யோகா பேருதவியாக இருந்ததாகக் குறிப்பிட்டார். தேசிய கல்வி கொள்கை 2020, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.
நமது பாடத் திட்டத்தில் யோகாவை சேர்க்குமாறு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலுக்கு அமைச்சர் பரிந்துரைத்தார். தேசிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு வரும் வேளையில், ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி முதல் 12-ஆம் வகுப்பு வரை யோகாவிற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பள்ளி, வட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவுகளில் யோகா ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தவும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1835027
*************
(Release ID: 1835083)
Visitor Counter : 199